பக்கம்:தொழில் வளம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

தொழில் வளம்


பொருள்கள் போன்ற பலவற்றை இறக்குமதி செய்வது அவசியமாகின்றது. அதே சமயத்தில் நம் நாட்டில் இருக்கக்கூடிய பல பொருள்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதன் மூலம்தான் நாம் பல பொருள்களை இறக்குமதி செய்வதற்கான அன்னியச் செலாவணியைச் சேகரிக்க முடியும். ஆகவே வெளிநாட்டு வர்த்தகம் ஏற்றுமதி இறக்குமதி இருவகைகளிலும் பெருகிக் கொண்டே போகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றபடி துறைமுக வசதிகளையும் விரிவாக்கியாக வேண்டும். சென்னைத் துறைமுகம் இந்த அடிப்படையில்தான் இப்போது பெரிய அளவில் விரிவாக்கப்பட்டு வருகின்றது. 1896-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தத் துறைமுகம் 1911 வரை எந்தவிதமான முக்கிய வசதிகளும் இல்லாமலேயே இயங்கி வந்திருக்கிறது. 1911-ல் சில புதிய வசதிகள் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டன. பிறகு 40 ஆண்டுகளுக்கு அதாவது 1951-ம் ஆண்டுவரை எந்த விதமான வளர்ச்சியுமே ஏற்படவில்லை. 1980-ம் ஆண்டுவாக்கில் இத்துறைமுக வழியாக 10 லட்சம் டன் அளவிற்குப் பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதியாகி வந்தன. இரண்டாவது யுத்தம் ஆரம்பித்ததன் காரணமாக இங்கு நடை பெற்று வந்த வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது யுத்தம் முடிந்தவுடன் 20 லட்சம் டன் அளவிற்குப் பல இயந்திரங்களும், உணவுப் பொருள்களும் இங்கு இறக்குமதியாக ஆரம்பமாயின. துறைமுகத்தில் இருந்த வசதிகள் இவைகளுக்குப் போதுமானவையாக இல்லை. ஆகவே துறைமுகத்தை, விரிவுபடுத்தத் திட்டமிட வேண்டியது அவசியமாயிற்று. துறைமுக நிர்வாகத்தினிடமிருந்த நிலம் மிகக் குறைவாக இருந்த காரணத்தினால் இருக்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/285&oldid=1381596" இலிருந்து மீள்விக்கப்பட்டது