பக்கம்:தொழில் வளம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாண்டுச் சாதனைகள்

283


பகுதிக்குள் இந்தத் திட்டத்தை ஏற்பாடு செய்வது கடினமாயிற்று. துறைமுக அபிவிருத்தியின் அவசியத்தை உணர்ந்து நம் மாநில அரசாங்கமும் இப்போது துறைமுகத்தின் தென் பகுதியிலே இருக்கக் கூடிய கடற்கரைப் பகுதியைத் துறைமுக விரிவுக்காகக் கொடுத்திருக்கிறார்கள். 1952-ம் ஆண்டில் 86 ஏக்கரா மதராஸ் போர்ட் டிரஸ்டுக்குக் கொடுக்கப்பட்டது. பிற்பாடு இந்த நிலமும் போதாது என்ற நிலைமை ஏற்பட்ட காரணத்தினால் கூவம் நதி வரையில் இருக்கக்கூடிய 77 ஏக்கரா நிலத்தைச் சர்க்கார் மேலும் கொடுத்து உதவியுள்ளது.

பல பொருள்கள் சென்னைத் துறைமுகத்தில் இறக்குமதியாவதுடன், சமீபகாலத்தில் இரும்புக்கனி இங்கிருந்து பெரிய அளவில் ஏற்றுமதியாகி வருகின்றது. 1950-ம் ஆண்டில் சுமார் 20,000 டன் அளவிற்கு இரும்புக்கனி இத்துறைமுகத்திலிருந்து வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. தற்போது அது 7.8 லட்சம் டன் அளவிற்கு உயர்ந்துள்ளது. அடுத்த 5 அல்லது 10 வருஷங்களுக்குள்ளாக 30 அல்லது 40 லட்சம் டன் அளவிற்கு இரும்புக்கனி ஏற்றுமதியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வர்த்தக வளர்ச்சிகளையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு சென்னைத் துறைமுகம் இன்றைக்கு விரிவாக்கப்பட்டு வருகின்றது.

கப்பல்கள் வந்து நிற்பதற்கும்,கப்பல்களிலிருந்து பிரயாணிகள் இறங்குவதற்கும், வெவ்வேறு பொருள்களே இறக்குவதற்கும் வேண்டிய பல்வேறு திட்டங்கள் இன்று நிறைவேறி வருகின்றன. இவை எல்லாவற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/286&oldid=1381609" இலிருந்து மீள்விக்கப்பட்டது