பக்கம்:தொழில் வளம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

தொழில் வளம்


றிற்கும் அவசியமான அலுவலகம், மருந்தகம், தொழிற்சாலை வசதி, பணியாளர்களுக்கு வீடு கட்டும் வசதி இவைகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத் திட்டத்தில் மொத்தம் 16 கோடி ரூபாய் செலவழிக்கப்படும்.

சென்னைத் துறைமுகம் இந்த அளவில் பெரிதாக்கப்பட்டாலும்கூட, இந்த ஒரு துறைமுகம் மட்டும் நம்முடைய தேவையை நிறைவு செய்வது இயலாத காரியம். துறைமுக வசதி சென்னையில் மட்டும் இருக்கக்கூடிய காரணத்தினால் பல பெரும் தொழில்கள் சென்னைக்கு அருகில் அமைந்து, அதன் காரணமாக இப்பொழுதே பல நெருக்கடிகள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆகவே இன்னொரு பெரிய துறை முகத்திற்கு ஏற்பாடு செய்வது மிகவும் அவசியமாகின்றது. இந்த அடிப்படையில்தான் சென்னை அரசினர் தூத்துக்குடித் துறைமுகத்தை ஒரு ஆழ்கடல் துறைமுகமாக மாற்றவேண்டுமென்று அடிக்கடி வற்புறுத்தி வந்திருக்கின்றனர். மூன்றாவது திட்டக் காலத்தில் தூத்துக்குடித் துறைமுக வளர்ச்சித் திட்டம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென இப்போது முடிவாகி இருப்பதை எல்லோரும் வரவேற்பார்கள். அந்தத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றி வைப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படுமென நம்புகிறோம். மேலும் அத்துடன் கடலூர், நாகைப்பட்டினம் போன்ற சிறிய துறைமுகங்களிலுள்ள வசதிகளையும் பெருக்கவேண்டிய தவசியம். அதற்காக மூன்றாவது திட்டத்திலே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

துரத்துக்குடித் துறைமுக வளர்ச்சியுடன் இணைந்திருப்பது சேது சமுத்திரத் திட்டம். இன்றைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/287&oldid=1381619" இலிருந்து மீள்விக்கப்பட்டது