பக்கம்:தொழில் வளம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

289


மிகப் பழங்காலத்தில் காசும் பணமும் வழக்கத்தில் இல்லாதன. அக்காலத்திய மக்கள் பல பொருள்களையும் செல்வமாகவே கொண்டார்கள். மாடு என்பதைச் செல்வமாகக் கொண்டதை முன்னமே பார்த்தோம். சங்கும் பலகறையும் பிற பொருள்களும் செல்வமாகப் போற்றப் பெற்றன. உண்மையிலேயே அக்காலத்தில் பொருள்களுக்குச் சிறந்த மதிப்பு இருந்து வந்தது. கொள்வதும் கொடுப்பதுமாகிய பண்ட மாற்றே வாணிபத்தில் சிறந்த இடம் பெற்றிருந்தது.

எனினும் காலவரலாற்று நிலையில் இது அவ்வளவு எளிமையாக இல்லாத நிலையும் காசும் பணமும் உண்டான நிலையும் இப்பண்டமாற்று நிலையை மாற்றி விட்டன. ஒவ்வொரு பொருளையும் நெடுந் தொலைவு கொண்டு செல்வது இயலாது மற்றும் அரிசி அல்லது நெல் கொடுத்து ஆடை வாங்க ஒருவன் நினைத்தால் ஆடை தருபவனுக்கு நெல் தேவையில்லாதிருக்கலாம். எனவேதான் இடையில் காசும் பணமும் பொருளின் அளவையும் மதிப்பையும் வரையறுக்கும் பொருள்களாக அமைந்தன. இன்று இந்தக் காசும் பணமுமே வாணிபத்தை வளர்க்கின்றன. உற்பத்தியாளரோ, விவசாயியோ தன் பொருளை இடையிலுள்ள வணிகருக்கு விற்றுத் தம் பொருளுக்கு உரிய பொருளைப் பண மாகப் பெற்று, தமக்கு வேண்டிய பிற பொருள்களை வேற்று வியாபாரிகளிடமிருந்து அப்பணத்தைக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளுகின்றான். இவ்வாணிக முறை எளிமையாக உள்ளதோடு தொழில் வளத்தைப் பெருக்கவும் வகை செய்கின்றது.

இன்று இவ்வாணிபத்துறை எத்தனையோ வகையில் வளர்ந்துள்ளது. உலக முழுவதிலும் இவ்வணிகக்

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/292&oldid=1381675" இலிருந்து மீள்விக்கப்பட்டது