பக்கம்:தொழில் வளம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

தொழில் வளம்


குழுக்கள் இருக்கின்றன. பழங்காலத்தில் ‘வணிகச் சாத்து’ என்னும் வியாபாரக் கூட்டங்கள் ஊர்தோறும் தத்தம் பொருள்களை மாடுகள், கழுதைகளின்மேல் ஏற்றிச்சென்று வாணிப்ம் செய்தார்கள் எனக் காண்கின்றோம். இன்றாே வணிகர் ஒவ்வொரு இடத்துக்கும் செல்ல வேண்டிய தேவையில்லை. பொருள் இடையில் முக்கிய இடம் வகிக்கின்றது. அதிலும் காசும் பணமும் கையிடைக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. நாடு முழுதும்-உலகமெங்கணும்-வங்கிகள் (Bank) தனியார் துறையிலும் அரசியல் துறையிலும் இயங்கி வருகின்றன. வாணிபத்துக்கும் அதன் வழியே தொழில் வளர்ச்சிக்கும் இந்த வங்கிகள் பெருந் தொண்டாற்றுகின்றன. செக் மூலம் கோடிக்கணக்கான பண மாற்றம் கடைபெறுகின்றது. வணிகருக்கும் தொழில் வளத்துக்கும் வேண்டிய பணம் முதல் ஈந்தும் சில வங்கிகள் பணியாற்றுகின்றதைக் காண்கின்றாேம். இன்று உலகெங்கனும் பல்வேறு வணிகக் குழுக்கள் திறம்படச் செயலாற்றிப் பல்வேறு பொருள்களைப் பிற நாடுகளுக்கு அனுப்பியும் பெற்றும் நாட்டின் செழிப்பையும் சிறப்பையும் பெருக்குகின்றன அரசாங்கங்களே இந்த வாணிபத்துறையிலே பங்கு கொண்டு தொழிற்படுவதையும் அறிவோம். பல்வேறு தொழில் ஆலைகளை அமைத்து அரசாங்கம் தொழிலைப் பெருக்குவதோடு, பல்வேறு பொருள்களை நாடுவிட்டு நாடு அனுப்புவதற்கும் ஒரே நாட்டுக்குள் பல பகுதிகளுள் விற்பனை செல்வதற்கும் திட்டங்கள் வகுத்துள்ளமை அறிவோம். ‘State Trading Corporation’ போன்ற பல தாவபனங்களும் நம் நாட்டில் இத்துறையில் தொழிற்படுவதை நாம் அறிவோம். மக்கள் தேவையறிந்து தேவையான பொருள்களைக் கண்டும் கொண்டும் வந்து கொடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/293&oldid=1381701" இலிருந்து மீள்விக்கப்பட்டது