பக்கம்:தொழில் வளம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

291


இவை பயன்படுகின்றன என்பர். தனி வணிகர் இலாபம் ஒன்றையே கருதிச் சிற்சில பொருள்களைப் பதுக்கி வைத்துக் காலம் வந்தால் கொள்ளை லாபத்திற்கு விற்பதையும் பிற தவறான செயல்களையும் அரசாங்கம் இவற்றின் மூலம் ஒரளவு நீக்க முயல்கின்றது. இன்னும் மக்கள் தேவைக்குரிய பொருள்களை உரிய நிலையில் அவர்களிடம் சென்று சேரத்தக்க வகையில் பல கூட்டுறவுப் பண்டக சாலைகள் நாட்டில் அரசாங்க உதவியோடு பயன்படுகின்றன. சென்னை நகரில் உள்ள திருவல்லிக்கேணி கூட்டுறவு விற்பனைச் சங்கம் (T.U.C.S) இப்பெரு நகரின் தேவையைப் பல வகையில் நிறைவேற்றுவதைப் பலரும் அறிவர்.

ஒரு சில வணிகர் தம் செயலால் நாட்டுக்குக் கெட்ட பெயர் வருவதை முன் ஒரு முறை கண்டிருக்கிறோம். தமிழ் நாட்டில் பழங்காலத்தில் பெரு நிலையில் தரை வாணிபமும் கடல் வாணிபமும் சிறக்க கடந்த விதத்தையும் கண்டோம். அந்த வாணிபத் துறையில் நேர்மையினைக் கடைப்பிடிக்க வேண்டிய வகையைப் பலரும் வற்புறுத்திவந்தனர். சான்றாண்மையை உலகுக்கு விளக்க உவமையாகப் பயன்பட்டதே இவ்வணிகக் கோல்தான்.

‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்
தொருபால்

கோடாமை சான்றாேர்க் கணி.’ (குறள். 118)


என்று வள்ளுவர் நடுநிலைமை தவறாத பெரியோர்களுக்குத் துலாக்கோலை எடுத்துக் காட்டி உலகுக்கு விளக்குகின்றார். ‘துலைநா வன்ன சீர்த்தி’ என்று திராசின் நடுநிலையை நாட்டில் பல நல்ல புலவர்கள் புகழ்ந்துள்ளனர். பிறபொருளையும் தம்பொருள் போலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/294&oldid=1381726" இலிருந்து மீள்விக்கப்பட்டது