பக்கம்:தொழில் வளம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

தொழில் வளம்


கருதி நல்ல முறையில் ‘கொள்வது உம் மிகை கொள்ளாது, கொடுப்பது உம் குறைபடாது’ வாணிபம் செய்தலே நல்ல வாணிபமாகு மென்றும் அவ்வாணிபத்தாலேயே நாடும் நகரும் சிறக்குமென்றும் வள்ளுவரும் பிறரும் கூறுகின்றனர்.

முதலிலார்க்கு ஊதியம் இல்லை’ (449) என்பதும்
‘வாணிபம் செய்வார்க்கு வாணிபம் பேணிப்

பிறவும் தமபோற் செயின் (120)


என்பதும் குறளாகும். இந்த முறையே வாணிபத்துக்கு ஏற்றதாகும். நம் நாட்டிலும் உலகில் பிற நாடுகளிலும் இந்த முறையில் வாணிபம் நடைபெறாத காரணத்தினால்தான் நாட்டுக்குநாடு நம்பமுடியாதநிலை ஏற்படுகிறது. இந்த நம்பிக்கையே வாணிபத்தின் உயிர் காடி. இந்நம்பிக்கை இழக்கும் நிலை உண்டாடானல் அந்த வாணிபம் நசித்துவிடும். அதனால் நாட்டின் உற்பத்தி நிலைகெட்டுப் பொருளாதாரம் சீர்கேடடையும். எனவே காட்டுத் தொழிலும் அதன் வழியே பெருகும் உற்பத்திப் பொருள்களும் அவற்றை விற்பனை செய்யும் வணிக முறையும் செம்மையுடையனவாக வளர்க்கப்பெறல் வேண்டும்.

‘திரைகட லோடியும் திரவியம் தேடு’ என்ற ஒளவையின் வாக்கும், கலத்தில் சேரும் வாழ்க்கை முறையும் தமிழ் நாட்டு மக்கள் உள்நாட்டில் மட்டுமன்றிக் கடல்மேல் கலஞ் செலுத்திப் பிற நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனக் காட்டுகின்றன. இன்று தரைவழியிலும் கடல் வழியிலும்-ஏன்?-வான் வழியிலும் வாணிபம் நடை பெறுகின்றது. தமிழ் நாட்டில் விளையும் காயும் வெற்றிலையும், கொய்த மறுநாள் இலண்டனில் கிடைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/295&oldid=1381758" இலிருந்து மீள்விக்கப்பட்டது