பக்கம்:தொழில் வளம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

293


கக்கூடிய வகையில் விரைவாக வான்வழிச் செல்லுகின்றன. மற்றும் குளிர்ச்சாதனங்கள் உண்டான காரணத்தால் எல்லாப் பொருளும் எல்லாக்காலங்களிலும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தம் தேவையை எங்கிருந்து வேண்டுமானலும் நிறை வேற்றிக் கொள்ளலாம். பணம் ஒன்றே முக்கியமாக வேண்டப்பெறுவது.

வாணிபத்துறையிலே இன்று நாட்டுக்கு நாடு பல கட்டுப்பாடுகள் உள்ளன. மிக எளிமையாக எப்பொருளும் எந்நாட்டுக்கும் செல்வதென்பது இயலாது. உலகில் பொருளாதார அடிப்படையில் நாடுகள் பல வகையில் பிரிக்கப் பெற்றுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில் வாணிபம் செய்யத் தனித்தனிப் பொருள் முறை கையாளப் பெறுகின்றது. அந்த முறைகளிலும் ஒரு நாட்டுக்கும் மற்றாெரு நாடுக்கும் பொருள் நிறைவு செய்ய வேண்டிய வகையிலேயே வாணிபம் அமைகின்றது. அதற்கென அரசாங்கங்கள் தத்தம் பொருள் அமைப்பை (Foreign Exchange) அடிக்கடி கண்காணித்துச் சரி செய்ய வேண்டியுள்ளது. கடன் வகையிலும் மாற்றுப் பொருள் நிலையிலும் நாட்டுக்கு நாடு நடை பெறுகின்ற வாணிபம் இன்று அதிகமாகவுள்ளது. நம் இந்திய நாடு, விடுதலை பெற்றபின் மேற்கொள்ளும் ஐந்தாண்டுத் திட்டங்களுக்காக நாடுகள் பல வற்றிலுமிருந்து பல்வேறு பொருள்களைப் பெறுகின்றது. அப்படியே பல்வேறு மூலப்பொருள்களையும் முடிந்த பொருள்களையும் (Raw materials & Finished Products) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. இந்த வகையில் நம் நாட்டு வாணிபம் பெருநிலையிலும் சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/296&oldid=1381788" இலிருந்து மீள்விக்கப்பட்டது