பக்கம்:தொழில் வளம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

தொழில் வளம்


நாட்டில் வேறு. அப்படியே வெப்ப நாடுகளின் உடை நிலைக்கும் குளிர் நாடுகளின் உடை நிலைக்கும் வேறு பாடு உண்டு. அப்படியே உற்பத்தியைப் பெருக்கும் நிலையிலும் வேறுபாடு காணலாம். தமிழ்நாடு போன்ற விவசாய நாட்டில் விவசாயத்துக்கு வேண்டிய பொருள்களைத் தயார் செய்யும் இயந்திரங்களையும் சாதனங்களையும் உண்டாக்க வேண்டும். மோட்டார் வண்டி தயார் செய்யும் நாட்டில் அதற்கு வேண்டிய துணைப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். காட்சிப் பொருள்களாகக் கிடைப்பதற்கும் நாடுதோறும் வேறுபாடு காண்கின்றாேம். இயற்கையோடு ஒட்டிய வாழ்விற்கு ஏற்ற காட்சிப் பொருள்களும் வேறுசிலவும் பல்வேறு மக்களின் காட்சிப் பொருள்களாக அமைகின்றன. பொருளாதார அடிப்படையிலும் அப்படியே. மர அகப்பை தொடங்கிப் பொன் கரண்டி வரையில் நாட்டில் புழக்கத்தில் உண்டு. இவை அனைத்தையும் மனதில் கொண்டு அவ்வந் நிலத்திலே வாழ்ந்துவரும் மக்கட் சமுதாயத்தின் பண்பாடு, பழக்கவழக்கம், செல்வநிலை, மனநிலை இவைகளை அறிந்து அவற்றின் அடிப்படையில் உண்டாக்கும் பொருள்களை சந்தைகளில் சிறக்க விற்பனையாவன என அறிந்து நாட்டு உற்பத்திகளைப் பெருக்க வேண்டும். இன்று எல்லா நாடுகளிலும் இந்த உண்மை ஓரளவு உணரப்பட்டே வருகின்றது. எனினும் இவற்றுக்குள் போட்டி மனப்பான்மையும் வேறு கசப்பான நிகழச்சிகளும் செயல்களும் மாறுபட்ட விளம்பரங்களும் புகுந்து நாட்டு நல்ல வாணிப வளனையும் தொழில் வளத்தையும் கெடுக்கின்றன. வாணிபத் தொழில் துறைமக்கள் மன மாற்றமே இக் கொடுமைகளின் ஊக்கத்துக்கு அடிப்படையான காரணமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/303&oldid=1382004" இலிருந்து மீள்விக்கப்பட்டது