பக்கம்:தொழில் வளம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

தொழில் வளம்



அவற்றையெல்லாம் ஈண்டு விரிப்பில் பெருக்கும். அவர் தம் மொழியிலேயே அடிக் குறிப்பில் அவற்றைத் தந்துள்ளேன். மக்கள் பொருள்களை வாங்குவதற்கு அவர்தம் உள்ள நிலைகளே (Rational and emotional) காரணம் என்பதையும் நிலை அறிந்து விற்பனையாளர் தம் தேவைகளை உற்பத்தியாளருக்குத் தெரிவித்து, அவர் தம் விருப்பத்துக்கு ஏற்ற பொருள்களைப் பெற்று வாணிபம் செய்தால் அவர் தம் இலாபம் பெருவதோடு நாட்டில் தொழில் வளமும் பெருகும் என்பதை அவர்கள் நன்கு விளக்கியுள்ளனர். ஆயினும் நிலை பெற்ற தொழில் பெருக்கும்- கனரகத் தொழில் வளத்துக்கு வேண்டிய பெரு இயந்திரங்களையோ அவை போன்ற பிறமின்சாரம் போன்றவற்றிற்கும் தொலைபேசிமுதலியவற்றிற்கும் வேண்டிய பொருள்களையோ அவ்வாறு அன்றி உற்பத்தியாளர்கள் நன்கு திறன் வாய்ந்த வல்லவர்களை வைத்து ஆராய்ந்தே தத்தம் தொழிற்சாலையில் திறம்பட உற்பத்தி செய்ய வேண்டும். இதில் மக்கள் மனநிலை இரண்டாவதாகவே கணக்கிடப்பெற வேண்டும்.


2. Pleasing the sense of taste
3. Securing home comforts
4. Securing personal comforts
5. Parental affection (Proper care of children)
6. Self Preservation (Maintaining and preserving health)
7. Cleanliness
8. Satisfaction of obtaining security from danger
9. Alleriation of laborious tasks
10. Obtaining opportunity for increased leisure

11. Pleasure of recreation
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/307&oldid=1382032" இலிருந்து மீள்விக்கப்பட்டது