பக்கம்:தொழில் வளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தொழில் வளம்


இணைத்து அவற்றையும் ஆடையாகக் கொண்டான். அவையே அவனுக்கு முதலாக நெய்தல் தொழிலைக் கற்றுத்தந்தன. மக்கிய மரப்பட்டைகளிலிருந்து உண்டான நார்களைப் பின்னவும் அவற்றை ஆடையாகப் பயன்படுத்தவும் சில நாட்களில் அவன் கற்றுக் கொண்டான். எனவே அவன் நெசவுத் தொழில் நெடு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. உண்ண உணவும் உடுக்க உடையும் அக்காலத் தேவைகளாக அமைய அவற்றின் வழியே. அவன் கற்றுக்கொண்ட தொழில்கள் ஒரு சிலவாம்.

அடிப்படை வாழ்வில் இந்த இரண்டுடன் மற்றொன்றும் உண்டல்லவா? அதுவே வீடு. விலங்குகளைப் போலவும் பறவைகளைப் போலவும் சுற்றிப் பரந்து உணவு தேடியும் உடை கண்டும் வாழ்ந்த மனிதனுக்குத், தலைசாய்க்க இடம் வேண்டும் என்ற உணர்வும் அதன் வழித் தேவையும் , உண்டானது இயற்கை யன்றோ! ‘விலங்குகளுக்குக் குகையும் பறவைகளுக்குக் கூடுகளும் உள்ளன; ஆனால் மனித குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை’ என்று இயேசுபெருமான் கூறியதாக நமக்கு லிவிலிய நூல் விளக்கம் தருகிறது. உண்மையிலேயே அவர் கூறிய சமய நெறியிலன்றி உலகியல் நெறியிலும் பலர் இன்றும் ‘குந்தக்’ குடிசை இல்லாமல் ‘விண்ணே கூரையாய். மண்ணே பாயலாய்’ உறங்குவதைச் சென்னை போன்ற நாகரிக நகரங்களில் இன்றும் காண்கிறோமே! ஆதி மனிதன் அந்த நிலையில் பலகாலம் வாழ்ந்திருப்பான். விலங்குகள் குகைகளிலும் பறவைகள் கூடுகளிலும் இராப்பொழுதையும் ஓய்வு நேரங்களையும் கழிப்பதைக்கண்ட அவனுக்குத் தனக்கும் தலைசாய்க்க இடம் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு உண்டாகியிருக்கும். அந்த உணர்வின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/31&oldid=1381377" இலிருந்து மீள்விக்கப்பட்டது