பக்கம்:தொழில் வளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வின் தேவை

29


வழி உண்டான வீட்டுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள அவன் எத்தனையோ தொழில்களைக் கற்றுக் கொண்டிருப்பான். இன்று எவ்வளவுதான் இந்த வீடு அமைக்கும் தொழிலில் மனிதன் முன்னேற்றம் அடைந் தாலும், அவன் குருவிக் கூட்டையும் அரக்கு மாளிகையையும் மண் புற்றையும் தேன் கூட்டையும் சிலந்தி அமைப்பையும் கட்டமுடியாமல் திண்டாடுகிறான் அல்லவா! இதைத்தானே புலவர்,

‘வான் குருவி யின் கூடு வல்லரக்கு தொல்கரையான்

தேன் சிலந்தி யாவர்க்கும் செய்வரிதால்’

என்று பாடியுள்ளனர். எனினும் அன்றைய மனிதன் அவற்றைக் கண்டு கண்டு தெளிந்தே தன் வீட்டின் தேவையை ஓரளவு நிறைவு செய்துகொண்டான் என்பது பொருந்தும்.

ஆதிமனிதனுடைய முதல் குடிசை எது என்று நமக்குத் தெரியாது. அது எங்குக் கட்டப்பட்டது என்பதும் புரியாத ஒன்று. எனினும் அந்தக் குடிசை அமைக்கும் தேவை அவனுக்குப் பல்வேறு தொழில் களைக் கற்றுக்கொடுத்தது. கீற்று முடையவும் நார் பிரிக்கவும் மூங்கில் அல்லது மரத்தைச் செம்மைப்படுத்தவும் மண்ணைக் கிளறிப் பிசையவும் மண்ணைச் சுவராக்கவும் இன்னும் எத்தனையோ தொழில்களைச் செய்யவும் அவனுக்குக் கற்றுக் கொடுத்ததன்றோ! அத்துடன் அந்தக் காலமே - அவனைக் கூடி வாழவும் செய்த காலமே - ஆண் பெண் சேர்க்கைதான் கருவுக்குக் காரணம் என்பதை அறியாத அந்த ஆதி மனிதனும் பெண்ணும் அவரவர் மனம் போலச் சுற்றிய நிலைபோக, அவர்கள் இருவரும் சேர்ந்து வாழவே வீடமைத்துக்கொண்ட காலம். பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/32&oldid=1381379" இலிருந்து மீள்விக்கப்பட்டது