பக்கம்:தொழில் வளம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

தொழில் வளம்



யாகும். இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தமிழ்ப்புலவர்,

'எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நலனே'

என்று பாடி விட்டுச்சென்றார். ஆம்! அந்த உண்மை இன்றும் என்றும் எல்லாத் துறைக்கும் பொருந்துவதாகும். தனி மனிதன் வாழ்க்கைத் தரம் (Per Capita) உயர்ந்தால் நாட்டுப் பொருளாதாரம் உயர்ந்தது என்பது பொருள்; அத்தனி மனிதன் வருவாய் குறையின் நாட்டுப் பொருளாதார நலன் சீர்கேடுற்றது என்பது கருத்து. இந்த உண்மையை உணர்ந்த காரணத்தால்தான் மிகப் பழங்காலத்திலிருந்து ஒவ்வொரு அறிஞரும், 'எல்லோரும் சோம்பலின்றி உழையுங்கள், பாடுபடுங்கள், பயனடையுங்கள், வாழுங்கள், வாழவிடுங்கள் நாட்டைப்பலமாக்குங்கள், பொருளாதாரத்தைப் பெருக்குங்கள்' என்று பல வகைகளில் - பல முறைகளில் - பல துறைகளில் கூறிக்கொண்டு வந்துள்ளனர். இத்துறையில் சென்ற நூற்றாண்டின் இடைக்காலத்திலே கருத்திருத்திய பல பெரியோர் நாட்டில் நல்ல முயற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். தாதாபாய் நௌரோஜி அவர்கள் பரந்த பாரத நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் அக் காலத்தில் உழவு, தொழில் முதலியவற்றின் ஆக்க நெறிகளையும் 1867-70 ஆகிய மூன்றாண்டுகளில் கணக்கிட்டு, அந்த நிலையும் நாட்டு வருவாயும் மிகத் தாழ்ந்துள்ளமையைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்டதோடு அமையாது அக்கால எல்லையில் எவ்வெவ்வாறு நாட்டுச் செல்வ நிலையைப் பெருக்க முடியுமென்று சூழ்ந்து ஆயத் தொடங்கினார். அதற்கு முன்னும் இந்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் பங்கு கொண்டார் பலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/331&oldid=1381967" இலிருந்து மீள்விக்கப்பட்டது