பக்கம்:தொழில் வளம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில் வளமும் பொருளாதாரமும்

329



உளர். ஒரு நூற்றாண்டு எல்லையில் நிற்றல் அமையுமென அதைக் குறித்தேன். அன்றுதொட்டு இன்று வரை இத்துறையில் பணியாற்றிய இந்தியரும் ஆங்கிலேயரும் பலராவர். அல்வப்போது உயர்ந்தும் சரிந்தும் ஏறியும் மாறியும், சிறந்தும் சிதைந்தும் வந்த பல்வேறு தொழில்களைப் பற்றியும் அவற்றின் வளர்ச்சி நிகழ்ச்சி பற்றியும், அவற்றால் நாடு பெற்ற உயர்வு தாழ்வுகளைப் பற்றியும் அவ்வக்கால் அரசாங்க வெளியீடுகள் திட்டவட்டமாகக் கணக்கிட்டுக் காட்டுகின்றன. 1867-70ல் பிரிட்டிஷ் இந்தியாவின் தனி மனித வருமானம் ரூ 20 என்றும், அக்காலத்திய நிலையில் மிக எளிய அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் தனி மனிதனுக்குக் குறைந்தது ரூ 34 தேவைப் படுமென்றும், எனவே நாட்டுப் பொருளாதாரம் தன்னிறைவு எல்லைக்குக் கீழே எங்கோ இருந்ததெனவும் குறித்துள்ளார். அடுத்து இத்துறையில் ஆய்வு நடத்திய ராவ் அவர்கள்(Dr. V.K.R.V. Rao) நௌரோஜி கணக்கில் சில மாறுபாடுகாட்டி, தனிமனித வருமானத்தை உயர்த்த நினைத்தார். அவர் எவ்வளவு முயன்றும் 23 அல்லது 24க்கு மேல் இயல வில்லை. பின்வந்த கர்சன் பெருமகனார் (Lord Curzon) சில ஆண்டுகளை ஆராய்ந்து, உழவு, பிற வழிகளில் வந்த வருவாயைக் கணக்கிட்டு 1800ல் தனி மனித வருவாய் ரூபாய் 27 ஆக இருந்தது, 1900-த்தில் 30 ஆக வளர்ந்தது எனக் காட்டுகின்றனர். வேறொரு அறிஞர் (DIGBY) அக்காலத்தில் (1898-99) தனிமனித வருமானம் ரூபாய் 12-60 ஆக இருந்ததையும் கணக்கிட்டனர். மற்றொரு அறிஞர் (T.J.Atkinson) 1875ல் தனி மனித வருமானம் ரூபாய் 30-5-0 ஆகவும் 1885ல்


* Indian Economics By G. B. JATHAR & S. G. BERI 101 & 102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/332&oldid=1381941" இலிருந்து மீள்விக்கப்பட்டது