பக்கம்:தொழில் வளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தமிழ் நாடு இன்றும்-நாளையும்



‘குமரியோடு வடவிமயத் தொருமொழி வைத்துல காண்ட நெடுஞ் சேரலாதன் காலத்தே பரந்த பாரத எல்லையையே தமிழ்நாட்டு எல்லையாகக் கூறிவந்தனர். அதை நிறுவ நமக்குப் போதிய சாதனங்கள் இல்லை என்றாலும் ஒரு காலத்தில் தமிழினம் இமயம் வரை இருந்திருக்கலாம் என்பதை நிலை நாட்ட மொழி ஆராய்ச்சிகளும் வரலாற்றுச் சிதறல்களும் ஒரளவு துணைபுரிகின்றன. அவற்றை வைத்துக் கொண்டு நாம் உரிமை கொண்டாடப் போவதில்லை; கொண்டாடவும் முடியாது. பிற்காலங்களிலே தமிழ்மொழி வழங்கும் தமிழ் நாட்டு எல்லையை வரையறை செய்துள்ளார்கள். அவற்றின்படி வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் கிழக்கும் மேற்கும் கடல்களும் தமிழ் நாட்டு எல்லைகளாக அமைந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/67&oldid=1399621" இலிருந்து மீள்விக்கப்பட்டது