பக்கம்:தொழில் வளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு இன்றும்-நாளையும்

65



'வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத் தமிழ் கூறும் கல் உலகம்’

எனத் தொல்காப்பியமும்

'வேங்கடம் குமரி தீம்புனற் பெளவமென்
றின் நான் கெல்ல தமிழது வழக்கே'

எனச் சிலப்பதிகாரமும்,

தமிழ் நாட்டுக்கு எல்லை வகுத்தன. ஆயினும் அந்த எல்லையும் இன்று இல்லை. மேற்கே மலையாளம் தனி நாடாக வளர்ந்து விட்டது. தமிழ் நாட்டு மூவேந்தருள் ஒருவராகிய சேரர் பரம்பரையினர் இருந்து, பதினேரும் நூற்றாண்டு வரையில் தமிழ் வளர்த்த மலைநாடு பிரிந்து மலையாள மொழி வழங்கும் தனி நாடாகவே மாறிவிட்டது. எனவே நன்னூலார் காலத்தில் தமிழ் நாட்டு எல்லை,

  ‘குணகடற் குமரி குடகம் வேங்கட்ம்’ 
    எனும் நான் கெல்லேயில் இருந்தமிழ்க் கடலுள்’ 

என்று மாறி மேற்கே கடல் எல்லை மாறி குடகு மலை எல்லையாக அமைந்து விட்டது. அண்மையில் வேங்கடமும் தமிழ் நாட்டு எல்லையாக இல்லை என்ற நிலை தெளிவாகிவிட்டது. பிரிந்திருந்த குமரிமுனை மறுபடியும் தென் எல்லையாக நின்று நமக்கு நலம் பயக்கின்றது. கிழக்கே வங்கக் கடல் மாற்ற முடியாத நிலை பெற்ற எல்லையாக நின்று விட்டது. நம் காலத்தில் வாழ்ந்த பாரதி கூட,

     நீலத் திரை கடல் ஓரத்திலே நின்று
         நித்தம் தவம் செய் குமரி எல்லை - வட 
     மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் 
         மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு’ 


என்று வீறு தோன்றப் பாடினார். எனினும் வட எல்லை

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/68&oldid=1399721" இலிருந்து மீள்விக்கப்பட்டது