பக்கம்:தொழில் வளம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தொழில் வளம்



நம் வசம் இல்லை. நம் ஆந்திர நண்பர்கள் அதை உரிமை கொண்டாடிக் கைப்பற்றியுள்ளனர். எனவே இன்றையத் தமிழ் நாடு எல்லையில் சுருங்கியதாக அமைந்துள்ளது. இந்நாட்டின் இன்றைய பரப்பு சுமார் 50,000 சதுரமைல் எனக் கணக்கிட்டிருக்கின்றனர்.


தமிழ் நாட்டில் உள்நாட்டிலும் கடற்கரையிலும் பன்னெடுங் காலமாகப் பலப்பல தலைநகர்களைக் கண்டோம். புகாரும் கொற்கையும் வஞ்சியும் கடற்கரைப் பட்டினங்களாக இருந்து வாணிபத்தைப் பெருக்கி நாட்டை வளம்படுத்தின. மதுரையும் காஞ்சியும் உறந்தையும் தஞ்சையும் தலைநங்கரங்களாக இருக்க அவ்விடங்களில் ஆண்ட மன்ன்ர் எண்ணற்றவர்-பல பரம்பரையினர். ஆயினும் ஆங்கிலேயர் நம் நாட்டிற்கு வந்த பிறகு அவை யாவும் தலைநகர்களாக இல்லாமல் புதிதாகச் சென்னைப்பட்டினம் தலைநகராயிற்று. தமிழ் நாட்டு வடகிழக்குக் கோடியில் கடற்கரையில் அமைந்த இந்நகர் ஆங்கிலேயராலேயே அமைக்கப் பெற்று வளர்ச்சியடைந்தது. இன்று உரிமை பெற்ற பின்பும் இத் தலைநகர் பல்வேறு தொழில் வளங்களும் பிறவும் வளரவளர வளர்ந்து கொண்டே வருகின்றது. சுமார் இருபது லட்சத்துக்கு மேற்கொண்ட மக்களை உடையதாகிப் பரந்த பாரதத்தில் கல்கத்தா, பம்பாய் ஆகிய இருபெரு நகரங்களை அடுத்து மூன்றாவதாகும் நிலையில் சென்னை இன்று சிறக்க வளர்கின்றது. தமிழ் நாட்டுத் தொழில் வளத்தையும் அண்டை நாடுகளான ஆந்திர கன்னட கேரள நாட்டுத் தொழில் வளத்தையும் வளர்க்கின்ற வகையில் சென்னைத் துறைமுகம் விரிவடைந்து கொண்டே வருகின்றது. பல்வேறு தொழிற் சாலைகளும் சென்னையில் பெருகப்பெருக அதன் எல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/69&oldid=1399751" இலிருந்து மீள்விக்கப்பட்டது