பக்கம்:தொழில் வளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழ்நாடு இன்றும்-நாளையும்

67


யும் வளா்கின்றது. இத்தலைநகாிலிருந்து, மக்களால் தோ்ந்தெடுக்கப் பெற்ற சட்ட மன்றங்களும் அவற்றின் அமைச்சா்களும் ஆளத் தமிழ்நாடு தன்னாட்சி பெற்ற நிலையில் வளா்ந்து வளம் பெற்று வருகின்றது.

இன்றைய தமிழகம் சுமாா் 50,000 சதுர மைல் நிலப் பரப்புடையதெனக் கண்டோம். பரந்த பாரத நாட்டின் தென் கோடியில் உள்ள தனி மாநிலமாக இது அமைந்துள்ளது. தில்லிப் பேரரசின் ஆணையின் கீழ் இது சிறு உறுப்பு நாடாக அமைந்து தொழில் படுகின்றது. இதன் கிழக்கெல்லை இன்றும் வங்கக் கடலாகவே அமைந்துள்ளது. வடக்கில் ஆந்திரமும் மேற்கில் கேரளமும் வடமேற்கில் கன்னடமும் இதன் அண்டை நாடுகளாக அமைந்துள்ளன. தெற்கில் இந்தியப் பெருங்கடலும் பாக்ஸ் நீாிணைப்பும் அமைந்துள்ளன. எனவே கடந்த பல நுாற்றாண்டுகளுக்கு முன்னிருந்த நிலபரப்பிலும் இன்று எல்லை அளவில் தமிழ்நாடு குறைந்தேயுள்ளது.

இத் தமிழ்நாட்டில் கீழ்ப்பகுதியாகிய கடற்கரைப் பகுதி தாழ்ந்தும் மேற்பகுதி அளவாக உயா்ந்தும் உள்ளது. எனவே இந்நாட்டில் பாய்ந்தோடும் ஆறுகள் அனைத்தும் மேற்பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்கு ஓடிக் கடலோடு கலக்கின்றன. கிழக்கு மேற்கு என்ற இரு திசைகளைக் குறிக்கும் பெயர்கள் இந்த அடிப்படையில் உண்டானவையே. வரவரக் கீழ் இறங்குவது கிழக்காகவும் மேல் உயர்வது மேற்காகவும் பெயரிடப் பெற்றன. கீழைப்பகுதி ஆறுகளால் மருத நிலமாக வளஞ் செய்யப் பெறுகின்றது. இதில் ஓடும் நதிகளை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/70&oldid=1423420" இலிருந்து மீள்விக்கப்பட்டது