பக்கம்:தொழில் வளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தொழில் வளம்



காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்ட தோர் வையைப் பொருனைநதி.என மேவிய ஆறு பலவோடத் திரு மேனி செழித்த தமிழ்நாடு’

என்று பாரதியார் அழகுபடப் பாராட்டியுள்ளார். ஆம்! வான் பொய்ப்பினும் தான் பொய்யாத இருவேறு பருவக் காற்றால் வரும் மழைநீரினல் என்றும் வற்றாத ஆறாக உள்ள காவிரி, ஆறுகளில் முதலிடம் பெற்றுள்ளது. மற்றைய பாலாறு தென்பெண்ணை ஆகிய ஆறுகள் ஒரோவோர் சமயங்களில் வெள்ளப் பெருக்காலும் வேறு காலங்களில் ஊற்றுப் பெருக்காலும் உலகூட்டி நாட்டை வளம்படுத்துகின்றன. தெற்கே உள்ள வையையும் தாமிரவர்ணியும் பெரும்பாலும் வற்றா ஆறுகள் என்னுமாறு, வளம் கொழித்தோடுவதை இன்றும் காண்கின்றாேம். இப்பேராறுகள் இரண்டாயிர மாண்டுகளுக்கு முன் சங்க இலக்கியங்களில் காட்டப் பெற்ற படியே இன்றும் நாட்டை வாழ்விக்கின்றன.

கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் கீழ்க் கடலுக்கும் இடையில் பாய்ந்தோடும் இவ்வாறுகள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை வளமுள்ள காடாகச் செய்கின்றன. இன்று இந்த ஆறுகள் அனைத்திலும் அணைகள் கட்டி விவசாயத்துக்கும் மின்சாரத்துக்குமாகப் பயன்படு வகையில் நீரைத் தேக்கி வளம் படுத்தும் நிலையில் பல ஆக்கப் பணிகள் நடைபெற்றுள்ளன; நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை, மைசூர், கேரள நாட்டுக்கு இடையிலும் உள்ள பழங்காலத்திய கொங்கு நாடும் தமிழ் நாட்டின் பகுதியேயாகும். அப்பகுதி, கோயன்புத்துர், சேலம், உதகை மாவட்டங்களக இன்று அமைந்துள்ளது. இன்று இப்பகுதியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/71&oldid=1381857" இலிருந்து மீள்விக்கப்பட்டது