பக்கம்:தொழில் வளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு இன்றும்-நாளையும்

69



பாவணி, குந்தா முதலிய ஆறுகளின் அணைகளால் வளம்படுத்தப் பெறுகின்றது. தமிழ் நாட்டின் பயிர் வளம் இத்தகைய பேரணைகளால் மட்டுமன்றி ஊற்றுக் கால்களாலும் ஏரிகளாலும் பிற சிறு பாசன, வசதிகளாலும் சிறந்துள்ளது.

இக்நாட்டின் தட்ப வெப்பநிலை மக்கள் வாழ்வுக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது. 110F க்கு மேற் போகாமலும் 65F க்குக் குறையாமலும் வெப்பநிலை, நாட்டில் அமைந்திருப்பதால் வடநாட்டைப் போன்று கொடும் வெப்பத்தையும் நடுங்கும் குளிரையும் இங்கே காணமுடியாது. உதகை, கோடை போன்ற இடங்கள் மலைப்பகுதிளானமையின் மிகுதியும் குளிர்ச்சியுள்ளனவாகிக் கோடைகாலத்தில் நாட்டு மக்களை வருக என வரவேற்று மகிழ்ச்சியூட்டுகின்றன.

இக்காட்டின் மழை அளவும் ஓரளவு பொருத்த மானதாகவே அமைந்துள்ளது. வட கிழக்குப் பருவக் காற்று, தென் மேற்குப் பருவக்காற்று இரண்டுமே இந் நாட்டிற்குத் தேவையான மழையைத் தருகின்றன. பெரும்பாலும் இன் நாட்டின் பகுதிகள் ஆண்டொன்றுக்கு 25 அங்குலம் முதல் 75 அங்குலம் வரை மழை யினைப் பெறுகின்றன. இந்த அளவு நடுநிலை அளவே என்பது நன்கு புலனாகும். கீழ்ப்பகுதியாகிய சோழமண்டலக் கரையே அதிக மழையை வடகிழக்குப் பருவக் காற்றால் பெறுகின்றது. தென் கோடியிலுள்ள நெல்லை முதலிய மாவட்டங்கள் இலங்கை இடைப்படுவதால் குறைந்த அளவே மழையைப் பெறுகின்றன.

இப்பரந்த தமிழ் நாட்டில் சுமார் மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள். தமிழ்நாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/72&oldid=1399794" இலிருந்து மீள்விக்கப்பட்டது