பக்கம்:தொழில் வளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தொழில் வளம்


தனியாகப் பிரிந்த காலத்தில் (1956) எடுத்த கணக்கு இதுவாகும். பரந்த பாரதத்தின் மக்கட் கணக்கில் இது ஐந்தாவதாக அமைந்துள்ளது; பரப்பில் பதினென்றாவதாகவே உள்ளது; சுமார் ஒரு சதுரமைலுக்கு 597 மக்களைக் கொண்டுள்ளது. இந்திய அடிப்படையில் ஒரு சதுர மைலுக்கு 312 மக்களே உள்ளனர். கேரளம், மேற்கு வங்கத்துக்கு அடுத்த நிலையில் அதிக மக்கள் விகிதத்தை கொண்ட மாநிலமாகும். ஏறக்குறைய இந்தியநாட்டுக் கணக்குக்கு இரண்டு மடங்கு மக்கள் திணிப்புள்ள தமிழ் நாட்டில் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடைய வேண்டியுள்ளது. தொழில் வளர்ச்சியிலும் இம்மாநிலம் இந்தியாவில் மூன்றாவதாக இடம் பெறுகின்றது. எனினும் இம்மாநிலத்தில் தனிமனித வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ 227 ஆக இருக்க, இந்திய வருமானம் ரூ. 261 ஆக அமைந்துள்ளது. (1956).

தமிழ் நாட்டில் பெரும்பாலான மக்கள் கிராமங்களிலேயே வாழ்கின்றனர். மக்கட் பகுதியில் முக்கால் எண்ணிக்கை கிராம வாழ்க்கை நடத்துபவர் என அரசாங்கப் புள்ளிக் கணக்கு கூறுகின்றது. அவ்வாறு வாழ்பவருள் 44% மக்கள், 2000 க்கு மேற்பட்ட மக்கள் உள்ள பெருங்கிராமங்களில் வாழ்கின்றனர். தமிழ் நாட்டில் சராசரி கிராமத்துக்கு 1235 மக்கள் வீதம் வாழ்கின்றார்களென்றும் இந்திய அடிப்படையில் இக்கணக்கு 530 ஆக உள்ளது என்றும் கூறுவர்.

தமிழ் நாட்டில் 295 நகரங்களும் பட்டினங்களும் உள்ளன. நகர்வாழ் மக்களுள் பெரும்பாலோர் (53%) 10,000 க்கும், 1,00,000க்கும் உட்பட்ட நகரங்களிலேயே வாழ்கின்றனர். மூன்றில் ஒரு பகுதிக்கு மேலாகப் பெரு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/73&oldid=1382164" இலிருந்து மீள்விக்கப்பட்டது