பக்கம்:தொழில் வளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு இன்றும் நாளையும்

71



நகரங்களில் வாழ்கின்றனர். சென்னை நகர் இந்தியாவிலேயே மூன்றாவதாக உள்ளதாகும். தற்போது அதன் மக்கள் எண்ணிக்கை 20 லட்சமாகலாம். சென்னை பெருவாணிப நிலையமாகவும், தொழில் நகராகவும் சிறந்த துறைமுகமாகவும் அமைந்துள்ளது. சென்னையை அடுத்து மதுரை, கோயமுத்துர் ஆகிய நகரங்களும் அவற்றை அடுத்து சேலம், திருச்சி போன்ற நகரங்களும் தொழில் வளர்க்கும் இடங்களாகக் கணக்கிடப் பெற்றுள்ளன. இவற்றுள் மதுரை யும், கோயமுத்துாரும் பலவகையில் தொழில் வளம் பெற்றுள்ளன.

தமிழ் நாடு பொதுவாகத் தொழில் வளம் பெற்ற தாகக் கருதினாலும், மக்கள் தொகையில் 14% வீதமே தொழில் துறையில் ஈடுபட்டுள்ளனர் (1956). பெரு ஆலைகளில் சுமார் 350, 700 மக்களே தொழில் புரிகின்றனர் எனச் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த கணக்கு காட்டுகிறது. இது இந்தியக் கணக்கில் பத்தில் ஒருபாக (10%) மாகும். இந்நாட்டின் பெரும் ஆலைத்தொழில் நூற்றலும் நெசவுமே. அவற்றுள் 40% ம், பொறியியல் துறையில் 15.7%ம், உணவில் 12.5%ம், இரசாயனத் துறையில் 6, 3%ம், விவசாய வளர்ச்சி ஆய்வுத்துறையில் 3.7%ம் மக்கள் தொழிலாற்றுகின்றனர். ஆலையற்ற தொழிலில் கைத்தறியே பெரும் பங்கு கொண்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல தொழில்கள் வளர்ச்சியுற்றுள்ளன. தொழிற்சாலைகளுக்கு மின்சார உற்பத்தியில் 68% வீதம் செலவா கின்றது. கடந்த சில ஆண்டுகளில் கீழ்க்கண்ட தொழில்கள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/74&oldid=1381885" இலிருந்து மீள்விக்கப்பட்டது