பக்கம்:தொழில் வளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தொழில் வளம்


போக்கு வரத்துச் சாதனப் பகுதிகள் 60% பல இயந்திர உறுப்புக்கள் 47%. இரசாயனம் 46% உணவுப் பொருள் உற்பத்தி 29% தோல் 20% ஆடை வகை 15%

மற்றும் சர்க்கரை, சிமிட்டி, பீங்கான் முதலிய உற்பத்தித் தொழில்களும் பல்வேறு பொறியியற்கலைகளும் நன்கு வளர்ந்துள்ளன. 1955 க்கும் 1970 க்கும் இடையிலுள்ள பதினைந்து ஆண்டுகளில் இந்திய நாட்டின் தொழில் வளம் 220% ஆகப் பெருகு மெனவும், அக்காலத்தில் தமிழ் நாடு இதே அளவில் வளர்ச்சி பெறின் சிறந்து விளங்குமெனவும் கூறுவர்.

தமிழ்நாட்டில் இன்னும் பலர் வேலை ஒன்றும் செய்யாது சோம்பி இருப்பதைக் காணமுடிகின்றது. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் என ஒளவையும் மடியின்மை என்றே'ஓர் அதிகாரத்தை வலியுறுத்திய வள்ளுவரும் பிறந்தநாட்டில் இன்னும் மடியை விடாது பற்றிக் கொண்டிருக்கும் மக்கள் இருக்கிறார்களே என எண்ணும் போது வருத்தம் உண்டாகின்றது. கிராமப் பக்கங்களிலுள்ள மக்களுள்ளே பெரும்பாலோர் உழுங் காலம் தவிர்த்த பிறநாட்களிலே கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்குவதைக் காண்கின்றாேம். இந்நிலை இரங்கத்தக்கதே தமிழ் நாட்டைத் தவிர இந்தியாவின் பிறபாகங்களில் இந்த அளவுக்குச் சோம்பி வாழ்வார் இலர் எனக் கணக்கிட்டுள்ளனர்.

ஆலைத்தொழில் பணியாளர்கள் எண்ணிக்கையில் சென்னை, பம்பாய், கல்கத்தாவை அடுத்து மூன்றாவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/75&oldid=1399795" இலிருந்து மீள்விக்கப்பட்டது