பக்கம்:தொழில் வளம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு இன்றும் நாளையும்

73



தாக வருகின்றது. பல்வேறு நல்ல இயந்திர சாதனங்களுடன் திறன் பெற்ற பொறியாளர்கள் மேற்பார்வையில் தமிழ்நாட்டுப் பேராலைத் தொழிற்சாலைகள் இயங்குகின்ற காரணத்தால் இந்த நாடு அத்துறையில் சிறந்த முன்னேற்றம் பெற்றதாகவே கருதப்படுகின்றது. விவசாயத் தொழில்துறைக்கு வேண்டிய பொருள்களை நம் மாநிலமே நமக்கு அளிக்கின்றதென்றாலும் பிற தொழில்களுக்கு வேண்டிய மூலப்பொருள்களுள் சில, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெறுகின்றன. அதற்கேற்ற, அளவில் தொழிலால் ஆக்கப் பெற்ற பொருள்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் அனுப்பப் பெறுகின்றன. கரி, உலோகங்கள், பருத்தி, பசுக்தோல் ஆலைப்பொருள் முதலின கொண்டு வரப்பெற்று, பதிலாக சிமிட்டி, நூல், தீப்பெட்டிப், பதனிட்ட தோல் முதலியன அனுப்பப் பெறுகின்றன. ஒரு சில தொழில் நிலைகளில் தமிழ்நாடு இந்திய நாட்டுப் பிற பகுதிகளைக் காட்டிலும் உயர்ந்துள்ளது. என்றாலும் பொதுவாக நாேக்குமிடத்து ஆலைத்தொழிலளவில் தமிழ்நாடு சற்றே தாழ்ந்துதான் உள்ளது.

பெருந்தொழில்களேயன்றி நாட்டில் பல்வேறு சிறு தொழில்களும் அளவற்றுப் பெருக வாய்ப்புக்கள் உண்டாகியுள்ளன. சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் பல சிறு சிறு தொழில்கள் தனியாகவும், கூட்டுறவு முறையிலும் தொழிற்பட்டு நல்ல பயன்களை உண்டாக்குகின்றன. இவைகளைத் தவிர கிண்டி, திருச்சி, மதுரை, பேட்டை, விருதுநகர், ஈரோடு, தஞ்சாவூர், மார்த்தாண்டம் முதலிய இடங்களில் தொழிற். பேட்டைகளும் பிறவும் அமைத்துப் பல்வேறு தொழில்கள் வளர முயற்சி செய்துள்ளார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/76&oldid=1399796" இலிருந்து மீள்விக்கப்பட்டது