பக்கம்:தொழில் வளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தொழில் வளம்



நாட்டின் வளர்ச்சியை இமயமுதல் குமரி வரையில் ஒரே நிலையில் எண்ணிக் காண்கின்ற காரணத்தினலே உறுப்பு நாடுகளின் தேவை ஏறத்தாழ அமைந்து விடுகின்றது போலும். நாட்டுப் பொருள் வருவாய் பதினைந்து ஆண்டுகளில் வளரவேண்டும் என்ற நிலையில் எண்ணற்ற வகையில் பலப்பல திட்டங்களைத் தீட்டுகின்றனர். 1955-56ல் இருந்ததைக் காட்டிலும் 1970-7 ல் இருமடங்கு பெருக வேண்டும் என்ற முயற்சியில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர். 1,08,000 மிலியனிலிருந்து 206,800 மிலியனுக்கு நாட்டுவருமானத்தை உயரக் கொணர வேண்டிய மூலதனத்தையும் கணக்கிட்டுள்ளனர். 31,000 கோடி ரூபாய் தேவை என்பது அவர்கள் கணக்கு. இதில் இரண்டாம் ஐந்தாண்டில் 6200 கோடி மூன்றாம் ஐந்தாண்டில் 9900 , நான்காம் 14800 , செலவாகும் எனக் கணக்கிட்டுள்ளனர். இக்கணக்குகள் அனைத்திந்தியாவுக்கும் பொருந்தியனவாம். இந்த அடிப்படையில் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் நிதி ஒதுக்கும் போது பலவற்றை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளமையின் இவை அனைத்தையும் ஆராய்ந்து ஒரு வரையறுத்த வகையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உதவுகின்றனர். இந்தக் கணக்குப்படி 1971 வரை தமிழ் நாட்டுக்கு 2200 கோடி ருபாய் தேவையாக உள்ளது. 1955-56ல் தமிழ் நாட்டு வருமானம் 730 கோடியாகக் கணக்கிட்டுள்ளார். இவ்வருமானம் பதினைந்தாண்டுகளில் இருமடங்காக வேண்டு மென்பது திட்டம் தீட்டுபவர் தம் உள்ளக்கிடக்கையாகும.

உழவைப் பொறுத்த வரையில் தமிழ் நாட்டில் அதிகமாக வளர வாய்ப்பு இல்லை. கடந்த இரண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/77&oldid=1399797" இலிருந்து மீள்விக்கப்பட்டது