பக்கம்:தொழில் வளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு இன்றும் நாளையும்

75



யிர மாண்டுகளாகவே தமிழ் மன்னரும் மற்றவரும் இத்துறையில் கருத்திருத்தி வந்ததோடு அண்மையிலும் பலவகையில் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கியுள்ளமை அறிவோம். நீர்ப்பாசனத்துக்காகவும் மின்சாரத் துக்காகவும் பேராறுகளெல்லாம் பயன்படுத்தப் பெற்று விட்டன. ஆயினும் தமிழ்நாட்டில் பயிரிடக் கூடிய நிலங்கள் பாழாகவே உள்ளன. 19 லட்சம் ஏக்கர் பயிரிடு நிலங்கள் தரிசாக உள்ளன என்றும், இது பயிரிடு நிலத்தில் சுமார் மூன்றில் ஒரு பாகமாகு மெனவும், இந்தியா முழுதிலும் ஐந்தில் ஒரு பகுதியே அவ்வாறு உள்ளது என்றும் கணக்கெடுத்துள்ளனர். ஆயினும் புதுப்புது நீர்ப்பாசன வசதிகள் பெருக இவற்றில் பல பயிரிடு நிலங்களாக மாற்றப் பெறலாம். தமிழ் நாட்டில் பாசன வசதி அதிகம். என்றும், 88% வீதம் பாசனம் பெறுகின்ற தெனவும், இந்தியாவில், 17% வீதமே பாசன வசதி உள்ள தெனவும் கணக்கிட் டுள்ளனர். பெரும்பாசன அணைகளும் சிறு ஏரி, கால் போன்ற்வையும் இறவைக்கிணறுகளும் காட்டுப் பாசன வகையில் பங்கு கொண்டுள்ளன. நில ஆராய்ச்சியாளர்களால் ஆழ்நீர் வழியே மேலும் பாசன வசதி பெற வழிகள் ஆராயப் பெறுகின்றன.

தமிழ் நாட்டில் நாட்டுவளம் அத்துணைச் சிறந்ததாகக் காணப்படவில்லை. ஒருவருக்கு 0.16 ஏக்கரே நாடு உள்ளது எனக் கணக்கிட்டிருக்கின்றனர். இந்தியநாட்டின் கணக்கு 0.35 ஏக்கராகும். கனிவளமும் அத் துணைச்சிறந்த வகையில் இல்லை என்றாலும் இன்றைய ஆராய்ச்சிகள் ஒரளவு நமக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைகின்றது. நெய்வேலி நிலக்கரியும், சேலத்து இரும்பும் அத்துணைச்சிறந்தன அல்லவேனும் அவற்றால் தமிழ் நாட்டுத் தொழில்வளம் பெருக கல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/78&oldid=1381914" இலிருந்து மீள்விக்கப்பட்டது