பக்கம்:தொழில் வளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தொழில் வளம்



வாய்ப்புக்கள் உள்ள தென்பதை யாவரே மறுக்கவல்லார்? இவற்றை வளர்க்கத் தக்க வகையில் இருப்புப் பாதைகளை அமைத்தும் பிறதேவைகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றும் வேறு தேவைகளை உடனடியாக நிறைவேற்றியும் ஆவன காணவேண்டுமென இந்திய அரசாங்கத்தாரைத் தமிழ்நாட்டு அரசாங்கத்தார் அடிக்கடி வற்புறுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டு மக்களும் இவற்றால் நாடே நல்ல தொழில் வளம் பெற்றுச் சிறந்தோங்குமென்ற நம்பிக்கையில் வாழ்கின்றார்கள்.

மற்றும் சிமிட்டி, கண்ணாடி, சீன சாமான்கள் போன்றவற்றைச் செய்யும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன எனக்கண்டுள்ளனர். இரசாயனப் பொருள்கள் உற்பத்தியும் பெருகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இன்னும் பல்வேறு சிறு தொழில்கள் பெருக நாட்டில் வசதிகள் உள்ளன. எனினும் எல்லாவற்றிலும் பொறியியல் துறையில் பெருவளர்ச்சி அடையக் கூடிய வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன. இந்த அடிப்படையில் பல பெருந்தொழிற்சாலைகள். அமைக்கும் திட்டம் அனைந்திந்திய அளவிலேயே தீட்டப்பெறுகின்றது. மூலப்பொருள் கிடைக்கும் நிலை, மக்கள் உதவி, தொழிலாளர் நிலை, போக்குவரத்து, பிற நிலைகளை யெல்லாம் ஆய்ந்து பெருந் தொழில்கள் வளர்க்கத் திட்டம் தீட்டி இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். தமிழ் நாட்டுஇன்றைய வாய்ப்புக்களுக் கிடையில் ஓரிரண்டு பெருந் தொழிற்சாலைகள் இங்கே அண்மையில் நிறுவப்படலாம் என்ற நம்பிக்கை உண்டு. தமிழ்நாடு அனைத்திந்திய அடிப்படையில் பெருந்தொழில்களையும் சிறு தொழில்களையும் வளர்க்கத் திட்ட அமைப்பின்படி செயல்படுமாயின் அடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/79&oldid=1399878" இலிருந்து மீள்விக்கப்பட்டது