பக்கம்:தொழில் வளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு இன்றும்-நாளையும்

77



பத்தாண்டுகளின் முடிவுக்குள் கீழ்க்கண்டவாறு அவற்றிற்கு மூலதனம் செலவிடப்பெறும் எனவும் கணக்கிட்டுள்ளனர். மொத்தம் 2000 கோடி ரூபாய் செலவு செய்யப்பெறும். அவை,

அடிப்படை 200 கோடி தொழில் 500 கோடி போக்குவரத்து 350 , மின்சாரம் 150 , வீடு, கல்வி, நலத்துறை 800 ,

2000,

என்ற வரையறுத்த கணக்கின்படி செலவிடப்பெறும். இதில் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டச் செலவும் சேர்க்கப் பெற்றுள்ளது. இவவாறு மூலதனம் செலவு செய்வதால் அடுத்த பத்தாண்டுகளில் தமிழ் நாட்டில் மட்டும் இன்னும் இருபது லட்சம் மக்களுக்கு வேலை கிடைக்கும் என்பது நன்கு தெளிவாகின்றது. எனவே நாட்டின் தொழில் வளர்ச்சி பல வகையில் சமுதாய, வாழ்வை உயர்த்தப் பயன்படுகின்றதன்றாே ?

இத்துணைத் திட்டங்கள் இருப்பினும் இயல்பாகவே உள்ள சில குறைபாடுகளாலே சில சமயங்களில் திட் டங்கள் நிறைவேற்ற முடியாத நிலை உண்டாவதையும் காண்கின்றாேம். தமிழ் நாட்டில், இயல்பான மூலப்பொருள் இல்லாமை, மின்சாரக் குறைவு, போக்குவரத்து வசதிக் குறைவு ஆகிய சில குறைபாடுகள் உள்ளமையின் நாம் நினைக்கிறபடி விரைவில் தொழில் வளர்ச்சிபெற முடியவில்லை. எனினும் சில நல்ல சாதனங்களும் நமக்கு இல்லாமல் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/80&oldid=1399722" இலிருந்து மீள்விக்கப்பட்டது