பக்கம்:தொழில் வளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தொழில் வளம்


பரந்த இந்திய நாடு முழுவதும் நிலை பெற்ற அரசியலை நாம் பெற்றிருக்கிறோம். அத்துடன் அரசாங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களும் பெருநெறியாளர்களும் திறம் வாய்ந்தவர்களாக நல்ல உழைப்பு உடையவர்களாக இருப்பதையும் காண்கிறோம்.

இரண்டாயிரமாண்டுகளுக்கு மேலாக அமைந்த பண்பாடும் இலக்கியமும் மொழிவளனும் பிற இயல்புகளும் மக்களை உண்மையில் ஆக்கப் பணிக்கு ஆயத்தம் செய்கின்றன.

கல்வி, தொழில் துறைகளில் நெடுங்காலமாகத் தெளிந்த அறிவும் அனுபவமும் பெற்று வாழையடி வாழையாக வந்த நல்ல தொழிலியல் ஞானிகளை நாம் பெற்றிருக்கிறோம்.

நாட்டில் பெருஞ்செல்வர் பலர் இல்லையாயினும் இருக்கும் ஒருசிலராகிய நாட்டுச் செல்வர்களும் தத்தம் செல்வங்களை முடக்கி வைக்காமல் பல்வேறு தொழிற்சாலைகள் நிறுவி நாட்டுத் தொழில் வளத்தைப் பெருக்கும் வகையில் நாள்தோறும் முன்னுக்கு வந்து கொண்டே இருக்கின்றனர்.

தொழிலாளிகள் குறைந்த கூலி பெற்று மனநிறைவோடு நிறைந்த வேலை செய்யும் அளவுக்குத் தேவைக்கு அதிகமாகவே நாட்டில் உள்ளனர்.

திட்டகாலத்துக்கு முன்னமேயே அதற்குத் தேவையான பல வழிகளைச் செய்து இயல்பாகவே நாடுவளர்ந்திருக்கும் நிலை மேலும் வளம்பெற ஏற்றதாக உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/81&oldid=1399879" இலிருந்து மீள்விக்கப்பட்டது