பக்கம்:தொழில் வளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு இன்றும்-நாளையும்

79


தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்களும் அத் துறையில் வல்ல சில தனி, அலுவலர்களும் பன்னெடுங் காலமாகச் சிறந்து சேவை செய்துவருகின்றனர்.

இத்தகைய தமிழ்நாட்டுச் சிறப்பெல்லாம் ஒன்று சேர்ந்து, பொருளாதார நிலையில் நம் நாடு பின் தங்கி இருந்தபோதிலும் தனது தொழில் வளத்தைப் பெருக்கிக்கொள்ள உதவுகின்றன. எனவே வேறு எத்தகைய குறைபாடுகளும் இடையூறுகளும் திட்டங்களுக்கிடையில் நேர்ந்தாலும் தமிழ்நாட்டு அரசாங்கமும், மக்களும் அவற்றைப் பொருட்படுத்தாது கருமமே கண்ணாக இருந்து இன்றைய தமிழகத்தை நாளும் நாளும் தொழில் துறையிலும், பிற கல்வி, நலத்துறை முதலியவற்றிலும் ஓங்கச் செய்து தாமும் சிறப்படைந்து தமிழ் நாட்டையும் சிறப்புறச் செய்வர் என்பது உறுதி.

பெருந் தொழில்களை உண்டாக்குவதோ, திட்டங்களை ஒழுங்குபடுத்துவதோ அவற்றுக்குரிய பொருள்களைப் பிரிப்பதோ அன்றிப் பெருந்தொழில் வளர்ச்சிக்குரிய வெளிநாட்டு இயந்திர சாதனம் மூலப் பொருள் முதலியவற்றை வாங்கிக்கொண்டு வருவதோ ஆகியவற்றில் தமிழ்நாட்டு அரசாங்கம் ஒன்றும் செய்ய இல்லாத நிலையில் உள்ளது. பரந்த பாரத நாட்டின் உறுப்பு அங்கமாக இது அமைந்துவிட்ட காரணத்தால் திட்டங்களும், பொருள் ஒதுக்கலும், ஏற்றுமதி இறக்குமதிபோன்ற கட்டுப்பாடுகளும் அனைத்திந்திய அரசாங்கத்தினிடமே இருக்கின்றன. எனினும் தமிழ் நாட்டு அரசாங்கம் இடைவிடாது நாட்டின் தேவையை ஆயிரத்து மூன்று மைலுக்கு அப்பால் கேட்கும் வகையில் முயன்று கொண்டே இருக்க வேண்டும்; முயன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/82&oldid=1381444" இலிருந்து மீள்விக்கப்பட்டது