பக்கம்:தொழில் வளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

5. உற்பத்தித்திறனும் வாழ்க்கைத்தரமும்




முன்னைய அத்தியாயம் ஒன்றில் நாம் மனித வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான அல்லது அடிப்படைத் தேவையானவை என்று உணவு, உடை, உறையுள் என்னும் மூன்றையும் குறிப்பிட்டோம். அதே நேரத்தில் இந்த இருபதாம் நூற்றாண்டின் மனநிறைவு இவை மூன்றும் கிடைத்தாலும் அதோடு திருப்தி அடையாமல் மனிதன் தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்கிறான் எனவும் கண்டோம். ஆகவே மனிதர்கள் வாழும் அந்தந்த நாடு அல்லது சமூகத்தை அனுசரித்து அவனுக்குச் சில தேவைகள் அவசியமென்று ஆகிவிடுகிறது. இந்த விதமாக ஒவ்வொரு சமூகத்தில் அல்லது நாட்டில் வசிக்கும் ஒருமனிதன் தன் தேவை அல்லது பெற்றுள்ள வசதிகளை மற்ற வேறோர் இடத்தில் உள்ள ஒரு மனிதனின் நிலையுடன் ஒப்பிட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/85&oldid=1381458" இலிருந்து மீள்விக்கப்பட்டது