பக்கம்:தொழில் வளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்பத்தித் திறனும் வாழ்க்கைத்தரமும்

23


டுப் பார்க்கத் தொடங்குகின்றான். இவ்வாறு வேறுபாட்டுடன் உள்ள வாழ்க்கை வசதிகளைத்தான் வாழ்க்கைத் தரம் என்று எல்லோரும் அழைக்கக் காண்கிறோம். இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாக முன்னேறி, நாடுகளின் வாழ்க்கைத் தரத்திலே பெருத்த அளவு வேறுபாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இதன் காரணம் அந்தந்த நாட்டு மக்களின் உழைப்பே என்று பலரும் உணர்கின்றனர். இவர்களின் உழைப்பே அவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாய் அமைந்து சமூக முன்னேற்றத்தைக் கொடுக்கின்றது. இந்தச் சூழ்நிலையில்தான் உற்பத்தித்திறன் (Productivity) என்ற சொல் பழக்கத்திற்கு வரத் தொடங்கியது. உற்பத்தித் திறன் ஒரு நாட்டில் அல்லது சமூகத்தில் அல்லது ஒரு தொழிற் கூடத்தில் அதிகமானால் அங்கங்குள்ள மக்களின் வருவாய் – வாழ்க்கைத் தரம் – உயரும் எனக் கண்டுள்ளனர்.

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள எவ்வளவோ திட்டமிடுகிறோம். ஒரு சிறிது வெற்றியும் கண்டிருப்போம். ஆனால், வாழ்க்கைத்தரத்தை நிச்சயமாக உயர்த்திக்கொள்வது எப்படி என்று தெரிந்து கொண்டோமானால் வாழ்க்கை வாழ்வதன் பயனை அடைவது உறுதி. ஆகவே இதற்கு மூலகாரணமாக அமையும் இந்த உற்பத்தித் திறனைப் பற்றிச் சற்று விளக்கமாகக் காண்பது அவசியம்.

நாம் ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டுமானால் அதற்குச் சில மூலப் பொருள்களும், அவைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/86&oldid=1381463" இலிருந்து மீள்விக்கப்பட்டது