பக்கம்:தொழில் வளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தொழில் வளம்


வேண்டிய அல்லது விரும்பிய உருவத்துக்குக் கொண்டு வரச் சில இயந்திரங்கள், அவ்வியந்திரங்களை இயக்குவிக்க வேண்டிய சக்தி, கவனிக்க ஆட்களின் சக்தி, இவைகளை வாங்கப் பணம், அமைக்க இடம் முதலியன வேண்டும். இவ்வசதிகளைத்தான் செய்மானம் (Input) என்று கூறுகிறர்கள். இவற்றைப் பயன்படுத்தி முடிவாக வரும் பொருள்களைத்தான் செலவினம் (output) என்கிறார்கள். இவற்றின் இடையே சில மூலப் பொருள்களும் மற்றும் செலவும் வீணாகின்றன. ஆகையினால் எப்பொழுதும் செலவினம் செய்மானத்தைவிடக் குறைவாகவே இருக்கும். இவ்விரண்டிற்கும் இடையே உள்ள விகிதத்துக்குத்தான் உற்பத்தித் திறன் என்று பெயர்.

விளைவின் அளவு/வசதிகளின் அளவு = உற்பத்தித்திறன்(Productivity) = செலவினம் = செலவினம் (Output)/செய்மானம் (Input)

இது எவ்வளவுகெவ்வளவு ஒன்றை நோக்கி அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உருவாகும் முறைகளில் வீண்நிலை அளவு குறைகிறது என்றும், இதனால் நட்டம் குறைந்து பலன் அதிகரிக்கிறது என்றும் கொள்ளவேண்டும். ஆகையால் பரந்த நோக்த்தில் பார்க்கும்போது உற்பத்தித்திறனை உயர்த்தல் என்று சொல்வது கிடைக்கின்ற வசதிகளாகிய ஆட்களின் சக்தி, இயந்திர சக்தி, அவற்றை இயக்குவிக்கும் சக்தி, பணம், நிலம் முதலியவற்றினைத் திறமையுடன் பயன்படுத்திக்கொள்ளுதல் என்பதாகும்.

உற்பத்தி அதிகமானல் மட்டும் சமூகத்தின் அல்லது நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவிட முடியாது. அந்த உற்பத்தி எந்த வழியில் அல்லது வகையில் உயர்த்தப்பட்டது என்று காணவேண்டும். உற்பத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/87&oldid=1399881" இலிருந்து மீள்விக்கப்பட்டது