பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100வல்லிக்கண்ணன்


தண்ணியோடு விழத்தான் செய்யும்; அதைத்தான் இது குறிக்கிறது. அதே கதைதான் இந்த மதுரை பழமொழிக்கும். மறதி பாராதவன் கழுதை என்பதுதான் சரி, எங்கேயாவது புறப்படுகிறபோது, அல்லது ஏதாவது காரியம் செய்யத் திட்டமிடுகிறபோது. எல்லாம் சரியாக இருக்குதா, எதையாவது அசந்து மறந்து விட்டுவிட்டோமா என்று நினைச்சுப் பார்க்கனும், அதுதான் மறதி பார்த்தல். அப்படி நினைச்சுப் பார்க்காமல், எல்லாம் சரியாக இருக்கும்னு தெம்பிலே போயிட்டு, அப்புறம் அது மறந்து போச்சே - இது மறந்து போச்சேயின்னு தலையைச் சொறிஞ்சபடி முழிச்சுக்கிட்டு நிற்பானே அவன் சரியான கழுதை இன்னு இதுக்கு அர்த்தம்" என்று "லெக்சர் அடிப்பார்". அவர் சுபாவம் அது.

ஒரு அம்மாள் அவரிடம் பேச்சோடு பேச்சாகச் சொன்னாள் "ஒரே ஊரில் இருக்கிறதை விட, கோயில் குளம், புண்ணிய தீர்த்தம் புது இடங்கள்னு போயிட்டு வர்றதுதான் நல்லது. அதுக்காகத்தானே மலை மேலேயும், கடலுக்கிட்டேயும் கோயில்களை அமைச்சிருக்காங்க. நான் எல்லா இடங்களையும் பார்த்தாச்சு. இன்னும் ரெண்டு இடம் பாக்கி இருக்கு. மானூர் கோயிலையும் மருதூர் அணையையும் பார்க்கலே" அது களையும் சாகுறதுக்குள்ளே பாத்திரனும், செத்ததும் கடவுள், மருதுர் அணையும் மானூர் அம்பலமும் கண்டாயான்னு கேட்பாராம்.

சொக்கய்யா அட்டகாசமாகச் சிரித்தார். "மானூர் அம்பலமும் மருதூர் அணையும்தான் ரொம்ப அற்புத மானவையின்னு கடவுள் நெனச்சுக்கிட்டிருந்தா அவரு ரொம்பப் பத்தாம் பசலிச் சாமியாத்தான் இருப்பாரு. நாட்டிலே உலகத்திலே என்னென்ன அற்புதமான கட்டிட வேலைப்பாடுகள், அணைக்கட்டுகள் எல்லாம் உண்டாகியிருக்கு இப்ப! நீ போயி மானூரையும்