பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்105


"போகாம என்ன! மதுரை, மெட்ராஸ் எல்லாம் போனேனே?" என்றார் அவர்.

"பின்னே அதுக்குள்ளே திரும்பி வந்துட்டிகளே?" என்று மேலும் ஆச்சரியப்பட்டார்கள் அவர்கள்.

"போனேன். வந்தேன்" என்றார் சொக்கய்யா. வெற்றிலைச் சாற்றை உமிழ்த்துவிட்டு வழக்கமான தொனியில் அறிவித்தார் :

"முதல்லே மது ரக்குத்தான் போனேன். வே, மதுரை முன்னாலே. அழகான ஊரா இருந்திருக்கலாம். இப்போ அங்கே அழகு எதையும் என்னாலே காணமுடியலே எங்கு பார்த்தாலும் லாட்ஜுகள், கட்டிடங்கள், கடைகள், ஜன நெருக்கடி ஒரே கூட்டம். நான் முக்கியமான தெருக்களில் எல்லாம் நடந்து பார்த்தேன். ஜனப்பெருக்கமும் அசுத்தமும் போட்டி போட்டு வளர்கிற ஒரு நகரமாகத்தான் அதுவும் இருந்தது கோயிலுக்கும் போனேன். என் மனசுக்கு எதுவுமே பிடிக்கலே போம். உடனே திருச்சிக்கு ரயிலேறினேன. அவன் தம்பி அங்கதன் என்பார்களே, அதுமாதிரித் தான் இருக்கு இதுவும். மதுரையிலாவது வீதி அமைப்புகளில் ஒரு ஒழுங்கு முறை இருக்கு. திருச்சியிலே ஒரு எழவுமே இல்லை. அங்கேயும் த ங் கி யி ரு க் க எனக்கு மனமில்லை. மெட்ராசுக்குப் போனேன். என்ன ஊரு அது சே! ரொம்பப் பெரிசா இருந்துட்டாப்போதுமா? கட்டிடங்கள் மாடிக்கு மேலே மாடி வச்ச கட்டிடங்கள், அகலம் அகலமான ரோடுகள், ஏகப்பட்ட ஒட்டல்கள் சினிமாத் தியேட்டர்கள், எங்கே பார்த்தாலும் கடைகள் கடைகள்- கடைகள்னு இருந்துட்டால் போதுமா? எப்ப பார்த்த லும் கூட்டம். எங்கேயும் கும்பல், நெருக்கடி பரபரப்பு, எதுக்காக மனுசங்க இப்படி இடிச்சு நெருக்கிக்கிட்டு, அவசரமும் பரபரப்புமா வாழனுமின்னு எனக்குப் புரியலே அமைதி