பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் 125


பெயர் பெறும் சூரப்புலியாகத் திரையில் காட்சிதர வேண்டும். இதுதான் அவருடைய ஐடியா!

அந்த ஐடியா மூஞ்சியில் ஒரு 'கும்மாங் குத்து’ விட்டு நிலை குலைய செய்வதாக இருந்தது அண்ணாச்சியின் பேச்சு. அவருடைய மூஞ்சியிலேயே ஒரு அறை விட்டது போல தோன்றியது ராஜப்பாவுக்கு. அண்ணாச்சி- ரொம்ப வேண்டியவர்! அவரா இப்படிப் பேசுவது?

சினிமாவில் நடிப்பது என்றால், பகட்டாக, மிடுக்காக, கம்பீரமாக, முதன்மையாக, அழகாக, அலங்காரமாக-எப்படி எப்படி எல்லாம் தோன்ற முடியும் என்று ராஜப்பா எண்ணியிருந்தார்? ஜம்மென்று டிரஸ் பண்ணிக் கொண்டு, தெருக்களில் பவனி வந்த போது குதிரை மீதமர்ந்து டாக்-டாக்-டாக் எனக் குளம்பொலி சிதற அவர் ஜோராகத் திரிந்த போது என்னென்ன ஆசைக் கோட்டைகள் கட்டி இறுமாந்திருந்தார்!. அந்தக் கனவுகளை, நினைப்புகளை, ஆசைகளை எல்லாம் பொக்கெனப் போகும்படி பண்ணிவிட்டாரே பாவி மனுஷன்....!

பெருமூச்செறிந்தார் ராஜப்பா. தனது எண்ணத்தைச் சொன்னார்.

அண்ணாச்சி முறுவல் பூத்தார். அப்படி எல்லாம் நடக்கணுமின்னா நீங்களே சொந்தமாப் படம் புரட்யூஸ் பண்ண வேண்டியதுதான்!” என்றார்.

ஆப்படியே புடிச்சாலும் டிஸ்ட்டிரிபியூட்டர்கள் கிடைக்கணுமே? சார்வாளே டிஸ்ட்ரிபியூட் பண்ண வேண்டியதுதானே என்பீர்களோ அண்ணாச்சி? அப்படியே டிஸ்ட்ரிபியூஸ் பண்ணினாலும் அங்கங்கே தியேட்டர்கள் கிடைக்கணுமே? ஊருக்கு ஊர் தியேட்டர்களுக்குப் பணம் கொடுத்து சாரே பிக்சரை ரன்