பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132வல்லிக்கண்ணன்


அப்படி நினைத்த நாலைந்து நாட்களுக்குள்ளேயோ, ஒரு வாரத்திலேயோ, மீண்டும் "ஆள் தேடும் படலம் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டு விடும். சில சமயம் ஒரு மாதம் வரை நீடித்திருக்கக் கூடும். கவலை இல்லாத காலம், திடீரென்று ஒரு நாள் வேலைக்காரிக்கு சீட்டுக் கிழிக்க வேண்டிய நெருக்கடி நிலை தலை தூக்கியிருக்கும்.

சூரியன் பிள்ளை பஞ்சவர்ணத்தம்மாளை அழைத்து வந்து அந்த வீட்டில் விடுவதற்கு முந்தி, பாக்கியம் என்றொருத்தி அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ஒருத்திதான் இரண்டு மாத காலம் வேலை செய்தவள்.

-இந்தப் பஞ்சவர்ணம் வேலையிலே சேர்ந்து இரண்டு மாசம் ஆகியிருக்குமா... ஊம், இருக்காதுன்னு தான் தோணுது. ஆனா ஒரு மாசத்துக்கு மேலே ஆயிட்டுதுன்னு நினைக்கிறேன்.

பஞ்சவர்ணத்தம்மாள் இந்த வீட்டில் ஒட்டிக் கொள்வாள் என்றுதான் சூரியன் பிள்ளை நினைத்திருந்தார். சாப்பாட்டுக்கே இல்லாது சிரமப்பட்டுக் கொண்டிருந்த பஞ்சவர்ணத்தம்மாள் இருக்கிற வேலைகளைச் செய்தவாறு செளகரியமாக இருக்கலாம். வேலைகளும் அதிகமாகவோ கடுமையாகவோ இரா. மாதக் கடைசியில் சம்பளம் என்று முப்பது ரூபாய் கிடைக்கும். பஞ்ச நிலையிலிருந்த பஞ்சவர்ணத்தம்மாளுக்கு இது சுகவாசமாக அல்லவா தோன்றும் என்று அவர் எண்ணினார்.

ஆனால் அவள் என்னவோ தன் சுயவர்ணத்தைக் காட்டி விட்டாளாமே?

-அந்த வீட்டின் ராசியோ, அல்லது வந்துசேரும் வேலைக்காரிகளின் ராசிதானோ, ஒருத்தி கூட நிலைத்