பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் 133


திருப்பதில்லையே! வீட்டு அம்மாளுக்கு வேலைக்காரியைப் பிடிக்காமல் போய்விடும். இல்லாவிட்டால், வேலைக்காசிக்கு அந்த இடம் ஒத்து வராமல் போய் விடும்! எப்படியானாலும், சிவராமன் சாருக்குத்தான் வேறு ஆள் தேட வேண்டிய பொறுப்பு ஏற்படுகிறது. இது பெரிய தலைவலிதான்.

ஒவ்வொரு வேலைக்காரியைப் பற்றியும் சிவராமன் சூரியன் பிள்ளையிடம் சொல்லத் தவறியதில்லை. தனது மனக்குறையை யாரிடமாவது சொல்லித் தீர்த்தால் ஏதோ ஆறுதல் ஏற்படுமே! சும்மா தெரிந்தவர்' என்ற நிலையிலிருந்து சிநேகிதர் என்ற தகுதிக்கு உயர்ந்திருந்த சூரியன் பிள்ளையிடம் சொல்லாமல் அவர் வேறு யாரிடம் கூறுவார்?

ஆகவே, எல்லா வேலைக்காரிகளைப் பற்றியும் அவருக்குத் தெரிந்துதானிருந்தது.

இரண்டு மாத காலம் வேலை பார்த்து ஒரு ரெக்கார்டு ஏற்படுத்தி விட்ட பாக்கியம் நன்றாகத்தான் நடந்து வந்தாள். அவ்வீட்டிலேயே அதிக நாள் நீடித்து விட்ட தெம்பிலோ என்னவோ, வரவர அவள் அதிக உரிமைகள் எடுத்துக் கொள்ளலானாள் தான் இருந்த இடத்தில் உட்கார்ந்தபடியே, குழந்தைகளை 'அதை எடு; இதைச் செய். தண்ணி கொண்டு வா. உருளைக் கிழங்குத் தோலை உரி என்ற தன்மையில் சில்லறை அலுவல்களைக் கவனிக்கும்படி ஏவலானாள். குழந்தைகள் செய்ய மறுத்தால், கூப்பாடு போட்டுக் கண்டித்தாள். வசைமாரி பொழிந்தாள். குளிப்பதற்கு, வீட்டு அம்மா தனக்கெனத் தனியாக வைத்திருந்த சோப்பை எடுத்து உபயோகிக்கத் துணிந்தாள். பிறகு, கொடியில் கிடந்த நல்ல சேலையை, அம்மாளிடம் கேட்காமல் தானாகவே எடுத்துக் கட்டிக் கொண்டாள். அம்மா கண்டிக்கவும், அதை அவிழ்த்து அப்படியே போட்டு விட்டாள். அலசிப் பிழிந்து உலர்த்தவில்லை என்று

தோ-9