பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185 ★ வல்லிக்கண்ணன்

கவனிப்பை பெற்றுவிட முடியும்னு,” என்று பெருமையாக முடித்தார் சூரியன் பிள்ளை.

“அண்ணாச்சி சூரியன் பிள்ளை பலே எம்டன்லா. சரியான ‘அய்டியா பிரதர்’ என்று அவரை தெரிந்தவர்கள் பேசிக் கொள்வார்கள். அவர் சொல்வதை எல்லாம் செயலில் செய்து காட்டுவாரோ என்னவோ-யாரும் அதுபற்றி கவலைப்படுவது இல்லை. அவரோடு பேசிக் கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. அதுதான் தேவை மற்றவர்களுக்கு.

“வேய்; நீரு என்னதான் சொல்லும். நீங்கள்ளாம் தூக்கி வச்சுக் கொண்டாடுத இட்லி, தோசை, உப்புமா, பூரி இதுகள்ளாம் நம்ம பழயச் சோத்து பக்கத்திலே நிக்க முடியுமாவே? பழையச் சோறு-ஆ! அமிர்தம்லா அது. ஒரு மரவை நிறைய பழையச் சோத்தை திறுகப் பிசைஞ்சு வச்சுக்கிட்டு, அருமையான கட்டித் தயிரை ஊத்தி, கொஞ்சம் உப்புக்கல்லைப் போட்டு பிசைஞ்சு, தொட்டுக்கிடதுக்கு சுண்டக்கறியும் வச்சுக்கிட்டு, உருட்டி, உருட்டி வாயிலே போட்டா, வயிறு கொண்டா கொண்டானில்லே கேக்கும்! வயிறு முட்டச்சாப்பிட்டுப் போட்டா, மணிக்கணக்கிலே கம்னு இருக்கும். அதும் ருசியே தனி வேய்!” என்று ரசித்துச் சொல்வார் அவர்.

“அது சரி அண்ணாச்சி, என்னமோ மரவைன்னு சொன்னீங்களே, அது என்ன?” ஒரு தம்பிச்சியின் நியாயமான கேள்வி இது.

“ஓ அதுவா? அது வந்து ஒரு பாத்திரம், மரத்திலே செய்தது. அதனாலேதான் மரவைன்னு பேரு. மரத்தை கடஞ்சி, தேவைப்பட்ட சைசிலே அழகா வட்டில், குழம்புக்கு புளி கரைக்கிறதுக்கு கும்பா மாதிரி, சாப்பிடுற தட்டு எல்லாம் செய்திருப்பாங்க. நாற்பது, அம்பது வருசங்களுக்கு முன்னாலே நம்ம பக்கமெல்-