பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதன் ★ 187

லாம் இது சர்வசாதாரணமா புழக்கத்திலே இருந்தது. அப்புறம் பீங்கான் தட்டு, கோப்பை, கெட்டில்னு எனாமல் பாத்திரங்க வந்தது. அதுக்குப் பிறகு ஜெர்மன் சில்வர்னு அலுமினியச் சாமான்கள் நெடுக ஆளுகையிலே இருந்துது. இப்ப இருந்தாங்குடியா எங்க பாரு, எவர்சில்வர் சாமான்கதான். இப்படி காலத்துக்குக் காலம் மாறுதல்கள் வந்துக்கிட்டே தானிருக்கு,” என்றார் பிள்ளை.

“ஒரு சமயம் சூரியன் பிள்ளை, கொம்பங்குளம் முருகையாப் பிள்ளையை கூட்டு சேர்த்துக்கிட்டு ஒரு ‘கிளப்புக்கடை’ ஆரம்பித்தார். ‘மண்பானை சமையல்’ விசேஷம் அந்த சாப்பாட்டுக் கடையில். சுண்டக்கறி, மாங்கா ஊறுகா ‘பேமஸ்’ சாயங்காலத்திலிருந்து இரவு வெகு நேரம் வரை ‘சுக்கு வெந்நி,’ ‘மொச்சைக் கொட்டை மசாலா சுண்டல்’ என்று ஜமாய்த்தார். கொஞ்ச நாள் கூட்டம் தூள் பரப்புச்சு, ஆனாலும் கடை ரன் பண்ணலே. தவசிப்பிள்ளையா இருத்த கொம்பங்குளத்துப் பிள்ளைவாள் அகப்பட்டதை சுருட்டிக்கிட்டு ‘ரன் பண்ணிட்டாக.’ மேலும், எல்லாரும் அண்ணாச்சிக்கு தெரிஞ்ச தம்பிச்சிகளா இருந்ததுனாலே, கடன் சொல்லி சாப்பிட்டு விட்டுப் போனாக. கடனை வசூல் பண்ண முடியலே. அண்ணாச்சி கொடுத்துத் தீர வேண்டிய கடன் பாக்கியும் ஏறிட்டுப் போச்சு. ஆகவே, கிளப்புக் கடை தானாகவே படுத்திட்டுது. அப்புறம் அதை தூக்கி நிறுத்துறது எங்கே?

“அந்தக் கட்டத்திலே தனக்கு அபாரமான அய்டியா ஒண்னு தோணிச்சு என்றும், ஆனாலும் பிழைச்சிட்டுப் போறானுகன்னு அதை செயல்படுத்தாமல் இருந்ததாகவும் அண்ணாச்சி பிற்காலத்தில் சொல்வது வழக்கம். அது என்னன்னு கேட்டா...

“வே, மகாயுத்தத்துக்கு முன்னாடி நம்மளவங்க பணம் சம்பாதிக்க ரங்கூன்-பர்மான்னு போனாங்க.