பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188 ★ வல்லிக்கண்ணன்

அவங்கள்ளே சில பளுவான்க இருந்தாங்க. எமப்பளுவானுக. பிசினசிலே கடனாயிரும். இந்த கோப்பனுக என்ன செய்வானுக தெரியுமா? பெரிய பெரிய வீடுகள்ளே வாடகைக்கு இருப்பானுக. வீட்டுக்குள்ளே அருமையான தேக்கு மரக்கதவுக, உத்திரம், சன்னல் கதவு எல்லாம் இருக்கும். இந்த எம்டனுக அதுகளை, அதுகள்ளே உள்ள பித்தளை கைப்பிடி, கீலு இதுகளை எல்லாம் நைசா அகட்டி வித்து காசாக்கிப் போடுவானுக. தாராளமா கடனும் வாங்குவானுக. கப்பல் இந்தியாவுக்கு எப்ப போகுதுன்னு குறியா இருப்பாங்க. ராத்திரி வீட்டிலே விளக்கை ஏத்தி வச்சிட்ட-அப்பெல்லாம் அரிக்கன் லைட்டுக தானே!-வீட்டைப் பூட்டிட்டு நைசாக் கிளம்பி கப்பல் ஏறிருவாங்க.

“வீட்லே விளக்கு எரிஞ்சுக் கிட்டே இருக்கும். வெளியேயிருந்து பாக்கிறவங்க ஆளுக இருக்குன்னு நெனைச்சிக்கிடுவாங்க.

ஆனா, ஆளுகளோ கப்பல்லே ஏறி கம்பி நீட்டியிருப்பாங்க! நானும் அது மாதிரி செய்யலாமான்னு நெனச்சேன். அது வேணாம்னிட்டு மஞ்சக்கடுதாசி கொடுத்திட்டேன். அதுதான் ஐ.பி. இன்சால்வன்ட் பெட்டிஷன். பாப்பர் நோட்டிசு!”

இதை சொல்லிவிட்டு அமர்க்களமாகச் சிரிப்பா, அண்ணாச்சி. “வே, காதல்லேயும், சண்டையிலேயும் எதுவும் நியாயமாகி விடும்னு சொல்லுவாங்க, கடன் வாங்கிட்டு ஏப்பம் போடுறவங்களும், ஏமாளிகளுக்கு நாமம் போடுவது நியாயமான காரியம்னு நம்புறாங்க. நானும் அப்படி நடந்ததுலே என்ன தப்பு?” என்று கேட்டார் சூரியன் பிள்ளை.

“அய்டியா பிரதர் வடக்கே போயிட்டு வெற்றிகரமா வந்து வரவேற்பு பெற்றதுதான் அவருடைய சாதனை