பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 லா. ச. ராமாமிருதம்

ஒப்புக்கிடறேனே. விதை நெல்லை வீட்டிலே சாப்பிட் டாச்சு. விளைஞ்சப்புறம் கொடுத்துக்கலாம்னு உங்கள் நெல்லில் எடுத்து வயலில் தூவிவிட்டேன். ஆனால் அது என் எண்ணமோ உங்கள் அதிர்ஷ்டமோ, மழையின் சூது, அத்தனையும் சாவியாய்ப் போச்சு. நான் எடுத்த தென்னவோ அஞ்சு மரக்கால்தான். நான் நெனச்சது ஒண்னு; நடந்தது ஒண்னு ஒழுங்கா விளைஞ்சிருந்தா எடுத்த சோடை தெரியாமல் ஒண்ணுக்கு ஒன்பதா திருப்பியிருப்பேன். ஆனால் அடுத்தவன் சொத்துக்கு மரக்காலுக்கும் மூட்டைக்கும் ஒரே நியாயந்தான். நான் தான் ஒப்புகிடறேனே!”

ஆனால் நான் இதை நெல்லாப் பாக்கல்லே. மரக்காலுக்கும், மூட்டைக்கும் வித்தியாசம் பார்க்கல்லே. எலிக்குப் பயந்து பெருச்சாளியிடம் கோ ட் ைட விட்டதைப் பாக்கலே, தனியா வாச்மேன் ஐயா மேலும் நான் கோவம் கண்டு கொள்ள முடியாது. ஆனால் ச மு த | ய த் தி ல் நம்பி எப்படி எல்லாம் மோசம் போகிறோம். இந்த வயதில் துரோகத்தைச் செரிக்க முடியல்லே. இப்போத்தான், மனம் எல்லாரிடமும் ஆதரவு தேடுது. இதுலே ஒண்னு கவனிக்கனும். ஐயா, யார் வீட்டுலேதான் எலி இல்லே'ன்னு ஐயா எதிர் வாதம் பண்ணியிருந்தால் நான் என்ன செய்ய முடியும்? நம்பித் தானே ஆவனும்! அதுலேதான் அவரையும் மீறி ஒரு நாணயம் பேசுதுன்னு கொள்றதா? அல்ல நியாயத்துக்கும் இப்போ நெஞ்சில அச்சமில்லேன்னு கொள்ளவா? அது தான் இன்னும் என் நெஞ்சைப் பிடுங்குது. ஆடை கொடுத்த ஐயாதான். எவ்வளவோ விஷயங்களில் பெரிய மனுஷன்தான். அவர் வெட்டி எத்தனையோ இளநீர் நான் சாப்பிட்டிருக்கேன். ஆனால் இதுமட்டும் ஏன் நெஞ்சில் முள் இடர்றது?

இத பாருங்க. எல்லோரும் கேட்டுக்கங்க இங்கே எல்லோருக்கும் தங்க மனசுதான். இல்லாட்டி இங்கே