பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

よ愛む லா. ச. ராமாமிருதம்

இதவு தந்தது. முழுக்க முழுக்க இவர் எனக்கேதான். இவரை ஏற்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

இந்தக் கலியானம் கூடாமல் இருந்தால், இன்னும் வேளை எட்டப் போயிருந்தால், என் அலுப்பு முற்றி என்ன ஆகியிருக்குமோ ?

என்னப்பா, இன்னும் எத்தனை நாள் என்னை

இப்படியே வைத்திருப்பதாய் உத்தேசம் ? யாருக்கேனும் சட்டு புட்டுன்னு முடித்து வைத்து, என்னை அனுப்புங் களேன்!” என்று கேட்டு, என் பெண்மை பிசகும் தருணக் கோட்டில் தவித்திருப்பேனோ?

ஆனால் அதெல்லாம் பற்றி இப்போ என்ன? ஆசை தப்பிச்சாச்சு. 'அத்தைக்கு மீசை முளைச்சால்.” என்கிற ரீதியில், பயங் கழன்று, இப்போதைய நெஞ்சு நிறைவில், நினைப்புக்கு ஒரு பொழுது போக்காச்சு. என்றேனும் ஒரு நாள் அவரிடம்ே சொல்லி, இருவரும் சிரிக்க, சேமித்து வைக்கும் சரக்காச்சு. -

{}on't Care

8ore

Change

அலட்சியத்தின் வழி அலுப்புக்கு வந்து, அது முற்றி: மாறுதல் நாடித் திருமணத்திற்கு வந்திருக்கும் இந்த யாத் திரையில், தனக்கொரு கணவன், அவன் மேல் ஆசை, எந்த சபையிலும் தாலிக்குரிய தனி மதிப்பு, முதற் தாம்பூலம்: இயற்கையின் வேட்கை, குடும்பம், குழந்தை, வீடு, வாசல் தனக்கொரு நிழல், என மணக்கோலம் காட்டிய பல கோணங்களின் ஒளி நடுவே, கலசமாய் வீசியது ஒரு எண் னம் ஒரே எண்ணம்.

Change

கைப்பொம்மை சலித்த குழந்தைக்குக் கடையிலிருந்து ஒரு பொம்மை.