பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனி 12 of

தரிசனி

அடுப்பு வாய் கவிந்த முகத்தில், திடீரென ஜ்வாலை குபிரிட்டதும், பொன்னி திக்’கிட்டுப் போனாள். புருவம் தீய்ந்து விட்டதோ தடவிப் பார்த்துக் கொண்டாள்.

அந்தப் பெயரிலேயே ஒரு magic இருக்கா? அல்லாமல் இத்தனை நாழி இடக்குப் பண்ணின விறகுக்குத் தன் நினைவில் அந்தப் பெயர் தோன்றியதுமே திடுக்கென ஏன் பயம் வந்தது ?

அவளுக்குத் திடீரெனத் தன் பெயர்மேல் இதுவரை அவள் கண்டிராத ஒரு அலுப்பு-வெறுப்பு உணடாயிற்று: பொன் னி என்ன பொன்னி? சொன்னவர் வாயில், அவரின் அந்தச் சமயத்தின் குணத்திற்கும், எண்ணத்துக்கும், நாக்குழலுக்கும் ஏற்ப, இழுபட்டு, பேரில், பேருக்குப் பேர் தன்மானம் கெட்ட பேர்!

ஆனால், தரிசனி.

ஒரு பொருளுக்கு ஒரே சொல் நாக்கில் திருப்பத் திருப்ப, எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கிய ஒரு உருவேற்றம். அது என்ன தரிசனம்? நினைப்பில் ஒரு அச்சம். நாக்கு நுனியில் ஒரு விறுவிறுப்பு. என்ன அழகான பேர் ! எனக்குப் பெண் பிறந்தால் இதைத்தான் வைக் கணும்.........

பொன்னி கன்னத்தடியில் ரத்தத்தின் குறுகுறுப்பு பரவுவது உணர்ந்தாள். சென்ற ஒரு வாரமாய்ச் சந்தேகம், தனக்கே நேற்றுத்தான் நிச்சயமாயிற்று. நேற்றிரவுதான், சிப்பியின் முத்து ரகஸ்யத்தை, அவர் செவி மடுத்த காற்றில் மூச்சோடு மூச்சாய் வெளியிடச் சமயத்திற்குக் காத்திருந்தாள். ஆனால் தரிசனி வந்து கெடுத்துவிட்டாள். அந்தக் கவிதா நேரம் இனி வராது. தரிசனி வந்த பிறகு, தன்வாயால் இனி தெரிவிக்கப் போவ. தில்லை. ரகஸ்யம், தன் ஒளி மறைவு தானே கெட்டு,