பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& லா. ச. ராமாமிருதம்

பண்ணி உன் ஆயுசிலும் பாதிக்கு மேல் ஆயாச்சு. நீ என்னைவிடக் கிழமாயிட்டே. ஆனால் உன் அப்பா இன்னும் உன் பிண்டத்துக்குக் காத்திருக்கார்னு உனக்குத் தோ ன ற தோ ? என்னவோ அப்பா எனக்கு நம்பிக்கையில்லே. மனுஷன் வேறு எங்கே பிறந்து? இன்னும் வேறெந்தக் குடியைக் கெடுத்திண்டிருக்கானோ , நீ முழிச்சுப் பார்த்தால் நான் பயந்துட மாட்டேன். உன் அப்பாவை உனக்குத் தெரியுமா, எனக்குத் தெரியுமா? உன் அப்பா என் கழுத்தில் கட்டியது தாலியா அது பாம்புன்னா பின்னே என்ன ? என்னவோ என்னை இத்தனை கெடுத்ததற்கு எனக்குத் தெரிஞ்சு உன் அப்பா வால் அமைஞ்ச ஒரே நல்ல காரியம் உன்னைக் கொடுத்தது ான். நீ மாத்திரம் எனக்கென்ன, நான் பெண்ணாய்ப் பிறந்ததுக்கு மலடு இல்லேன்னு நிரூபிக்கத்தானே !”

என் தாய் ஆணாய்ப் பிறக்க வேண்டியவள். ஏதோ சிருஷ்டிப் பிசகில் பெண்ணாய்ப் பிறந்து விட்டாள் என்று நானே எண்ணுவதுண்டு. நெஞ்சில் உரம் பாய்ந்தவள். நம்பிக்கைகளை அவள் துறந்தாள் என்பதைவிட, அவை அவளுடன் ஒட்டஇயலாது விட்டன என்பதே பொருந்தும்,

'அம்பி, இந்த ஊர் தாக்கு பிளந்த நாக்கு. என்னதான் பேசாது ? நீ வயத்திலிருக்கும்போதே உன் அப்பாவைக் காவேரி காலை வாரி விட்டதுக்கு, நீ கொஞ்ச நாள் பின் தள்ளிப் பிறந்திருந்தால் என் நாணயமே நாறிப் போயி ருக்கும். முன்தள்ளிக் குறை மாதத்தில் பூமியில் விழுந்தி ருந்தால் உன் உயிருக்கே தீம்பு : அப்பவும் ஏச்சுத்தான். 'பாவி, ஒண்ணே ஒண்ணு, 'தான் தான் போகப் போறோம்னு நடுவிட்டுப்போன பயிரையும் அழிச்சுட்டு நிக்கறா !” எதை நம்பி இங்கு வாழ ? உண்மையில் அம்பி, யாரால் யாருக்கு என்ன பிரயோஜனம் ?உன் வழி உனக்கு, என் விதி வழி நான். இந்தப் போலி வாழ்க்கை எனக்கு இத்துடன் போதும். தான் செத்த பின்னும் எனக்காகச் சடங்குகள் மூலம் இது என்னைத் தொடர வேண்டாம்.