பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔合 லா. ச. ராமாமிருதம்

வயதென்ன ? என் வயதென்ன ? பாங்க் ஏஜெண்ட் மாமி’ன்னு என்னை நாலு பேர் சுட்டிக் காட்டினால் எனக்கு வேண்டியிருக்காதா ? தீபாவளிக்குத் தீபாவளி பட்டுப் புடவை எல்லாம் நீங்கள் செயலில் இருக்கும் வரை தானே ? வைரத்தோடு ஆசையைத்தான் நான் அறவே துறந்தாச்சு.

"அடியே ஹேமா, செப்பு மாதிரி உன் காதுக்கு வைரத்தோடு எவ்வளவு அழகாயிருக்கும் தெரியுமா ? நீங் கள் எங்கள் வீட்டிற்கு குடித்தனம் வந்திருக்கும் யோகம், எங்கள் தட்டான்கிட்டேயே சொல்லி வெச்சு நல்லதா, மலிவா வாங்கித் தரேன்னு சியாமா மாமி படிச்சுப் படிச்சு அடிச்சுண்டதெல்லாம் செவிடன் காதில் சங்காப் போச்சு ஆமா, என் குறையெல்லாம் ஒரு பக்கம் இருக் கட்டும் - குமாருக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் ஆக வேண் டாமா ? சேகர் காலேஜ் படிக்க வேண்டாமா ? கண்ண னுக்கு ஒரு வழி புலப்படவேண்டாமா ? காயத்ரீ கல்யா னம் என்ன ஆறது ?

"அப்புறம் நமக்கு ஒரு கையொட்டி இருக்கே ரீகாந்த், ஐயாவுக்குப் பல்லக்கின்போது பையாவுக்கு தொட்டில்னு அவனை ஏலம் போடறதா ? எல்லாம் கிடக்க எனக்கு இருக்கிறது போறும்னு பொறுப்பில்லாமல் பேசினால் என்ன அர்த்தம் ? என்ன அர்த்தம்னு கேக்கறேன் ?”

கேட்கிறாள்...அடுக்குகிறாள். நான் எங்கிருந்தாலும் கேட்டுக் கொண்டேயிருப்பாள.

ஆகையால் நான் இங்கிருக்கிறேன். ஆனால் குடும்பம் இன்னும் சென்னையில் தான் இருக் கிறது.

பாதிப் பள்ளிக்கூடத்தில் சட்டிப் பானையைத் தூக்க முடியுமா ? என் உத்தியோகம் என்னைப் பந்தாடினாலும் என் ஒண்டி செளகரியத்துக்காகத் திடீரென்று இஷ்டத்துக் குக் குடும்பத்தைக் கலைக்க முடியுமா, குழந்தைகளை ஒட்