பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I Åst லா, ச. ராமாமிருதம்

-படத்துக்குப் போட்டே கொண்டுவந்துவிட்ட கண்ணாடியும் frame உம் அல்லவா வேலை செய்கிறது : இல்லையேல் சுருட்டி எங்கேனும் பெட்டியடியில் காலண்டராகவே கிடக்கும் என்றேனும் ஒரு நாள் பையன்கள் பெட்டியை ஒழிக்கும்போது, இதைத் தூக்கி யெறிந்துவிட்டு அந்த இடத்தில் ஒரு சினிமாஸ்டார் படத்தைப் பத்திரப்படுத்தும்வரை,

பையர் என்று சொல்லு, அவருக்கு நடக்கிறது. முப்பத்தி அஞ்சு” -

"அட, நம்பவே முடியவில்லையே, இருபத்தி அஞ்சுக்கு மேல் மதிக்கத் தோணல்லே, கலியாணம் ஆயிடுத்தா ? குழந்தை ஏதாவது.”

அவ்வளவுதான். எசமானியம்மா எங்கோ track மாறி யாச்சு அவளை ஸிக்னலில் போட்டால், தினம் நாலு விபத்துக்குக் குறைவில்லை.

தினத்தைவிட நரசிம்மன் இன்று இன்னும் நேர்த்தி யாகத் தோன்றுகிறார். சோபாவினின்று எழுந்து அவர் என்னைப் புன்னகையோடு வரவேற்கையில், பேப்பர்லாந் தருள் விளக்கேற்றினாற்போல் முகம் வெளிச்சமாகிறது. அவரைக் கையமர்த்தி நானும் அருகில் அமருகிறேன். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி ஒருவரில் ஒருவர் திளைத்திருக்கிறோம். நெஞ்சோடு நெஞ்சு கிளத்தல் என் பது இதுதானா ? இதயக் கலசத்தில் அமுதம் விளிம்பு வரை துளும்பி நிற்கிறது.

ஆனால் இன்று எல்லாமே நேர்த்தியாகத்தானிருக் கின்றன. அறையுள் அடிக்கும் சூரியன்கூட இன்று ஆகாச் கங்கையில் குளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறான். வெளிச் சம் அவ்வளவு துல்லியம். அறைச்சுவர்கள், மெத்தை வைத்துத் தைத்தாற்போல, பட்டுபட்டாய், மிருதுவாய் 3-Dயில் பிதுங்குகின்றன. காலடியில் தரையில் மொலெய்க் கோலம் கூச்சத்தில் அழகோடு பின்னி, உயிரோடு நெளி