பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் ? 14?

கின்றது. கண்ணை இதுகாறும் மறைத்த சதையோ, செதிளோ தானே உரித்து உதிர்ந்தாற்போல, பார்வையில் தனித்துலக்கம் உணர்கிறேன்.

'ஏன் ஒரு மாதிரியாயிருக்கேள்?"...நரசிம்மனின் குரல் பரிவில் விளக்குத் திரிபோல் சொடசொடக்கியது.

"அப்படியா? எனக்குத் தெரியல்லியே'- என். உடம்பைப் பார்த்துக் கொள்கிறேன். என்றைக்கும் போல் கிழவனாய்த்தான் இருக்கேன்.?”

"எனக்குச் சொல்லத் தெரியவில்லையோ என்னவோ?” சட்டென மனதைத் திடம் பண்ணிக் கொண்டவறாய்: 'உங்களை இன்று ஒரு கேள்வி கேட்கப்போகிறேன்,'

மின்விசிறி ஆவேசம் கண்டமாதிரி விசை கூடுகிறது. "என்ன, விடுகதையா?”

'உங்களுக்கு எப்படியோ? ஆனால் எனக்கு வேடிக்கையாக இல்லை”-அவர் குரல் தடிக்கவில்லை. அதில் ஏதோ சோகம்தான் துளித்தது.

“என்னை வருடங்களாக உறுத்திக்கொண்டிருக்கும் கேள்வி. நான் மதிக்கும் அறிஞர்கள், மூதோர்கள், பிரமு கர்கள் எல்லோரையும் கேட்டுவிட்டேன். ஆனால் எனக்குச் சமாதானம் இல்லை. பாதிப்பேர் ஏதோ சொல்லி மழுப்பிவிடுகிறார்கள். பலர், சம்பந்தமில்லாமல், தங்கள் பண்டிதத்தைக் காட்டிக் .ெ கா ள் கி றா ர் க ள் , அல்லது. இதென்ன கேள்வி என்று கேலி. நானும் ஒப்புக் கொள்கிறேன். சில விஷயங்கள் அவசியமோ அல்லவோ, நம் முழுச்சிந்தனையையும் அடைத்துக்கொண்டு, ஒரு கேள்வி மறு கேள்விகளை ஒவ்வொன்றாய் விழுங்க், ஒரே கேள்வியாகத் தி ர ண் டு உருண்டு அதனின்று மீட்சிய்ே இல்லாத அவஸ்தையில் உழல்கிறேன்.'

குருவி ஒன்று ஜன்னல் சட்டத்தின்மேல் குந்திட்டு, வாழ்வின் களிப்புக்குக் கட்டியம் கூறுகிறது.