பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமன்னிப்பு Höf

உனக்கு இரங்கியோ பயந்தோ அவள் தோன்றினா லும் உன் கோபத்தில், அவளையே நீ கையைப் பிடித்து இழுப்பாய்.

உனக்கு ஸித்திகள் கி ட் டி னா ல், அவைகளை உபயோகப்படுத்தாமல் உன்னால் இருக்க முடியாது. சோறு, தண்ணீர் இல்லாமல், உயிர்கூட பிரிந்து இருப் பாய். ஆனால் உன் அதிகாரம் பிரிந்து உன்னால் ஒரு கடினம் கூட இருக்க முடியாது. இதோ ஒரு நிமிஷத்துக்குள் உன் கோர்ட்டை நடத்தி விட்டாயே!

அப்பா உன்னைக் கரிக்கிறேன். நீ செத்துப் போனால்நல்லவேளை எப்பவுமே நீ இருந்து கொண்டேயிருக்க முடியாதே- எல்லோருடனும் சேர்ந்து நானும் வேஷம் போடுவேன்,விக்கி விக்கி விக்கி அழுவேன். ஏன் நிஜமாய்க் கூட அழலாம்; ஆனால் 'உஹ-புஹா'-என் தேம்பல் களுக்கிடையில் உஸ்'-நீண்ட பெருமூச்சு இப்பவே எனக்குக் கேட்கிறது, உன் நினைவு-உன்னைக் கண்டு பயத்தின் சுமையிறங்கிய அசதி-ஸுகம் தலையே காற்றில் பறப்பது போல் லேசாய், குளு குளுக்கிறது.

அப்பாடா ! என்மேல் கவிந்த இருள்கள் விலக ஆரம்பிக்கின்றன. வயிற்றின் சங்கடம் அடங்குகிறது. மயக்கத்திலிருந்து நினைவின் விடிவிற்கு மீள்கிறேன்.

பாப்பா பாப்பா!! எங்கேடா போயிட்டே,சாப்பிட வாயேண்டா? எங்கிருந்தோ அம்மா கத்துகிறாள்.

நான் வாயை மூடிக்கொண்டிருக்கிறேன். பதில் சொல்ல வேண்டுமென்றுகூடத் தோன்றவில்லை.

தோட்டத்தில் போட்டிருக்கும் கல் பெஞ்சில் படுத் திருக்கிறேன். ஜ்லத்தில் நனைந்தாற்போல் காற்று குளு மையாய் மூச்சு விடுகிறது. தென்னங்கன்றின் மட்டை தலைமேல் இடிக்கிறது. அம்மா தன் கையாலேயே

த்வனி-11