பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗密靈 லா, ச. ராமாமிருதம்

அறிவு அத்தனையும் வறட்சை. வறட்சைக்கா வந்திருக் கேன் ? குடம் தளும்புற மாதிரி அதென்னகிளு கிளுப்பு ? சிரிப்பா அழுகையா ? சிரிப்பாயிருந்தாலும் அதைக் கேட்டதும் எனக்கேன் இ ப்ப டி தொண்டையை அடைக்கிறது ?

"என் குழந்தைகள் செழிக்கத்தானா வந்திருக்கேன் ! இல்லை எனக்காகவா வந்திருக்கேன் ? குழந்தைகள் வயிறு குளுமை கண்டு என் ஈரம் நெஞ்சுவரை பாஞ்சு எங்கும் rேமம் தழைக்கணும்னு எப்படி ஒடோடி வரேன் தெரியுமா ? எங்கிருந்தோ எங்கிருந்தோ வர்ரேன். எங்கிருந்து நான் எப்படி வந்தாலும் அடங்கற இடம்னு ஒண்ணு எனக்கும் உண்டே, அது இங்கே எங்கே ? இங்கே எங்கே ?”

அந்தப் பொம்புள்ளை திடீர்னு புடவையைக் கழஞ்சு கீழே போட்டுட்டு, முண்டக்கட்டியா ஒடிப்போய் கிணற்றுலே தொப்புனு குதிச்சிட்டா.

"ஐயோ'ன்னு அ ல றி க் கி ட் டே பாட்டியம்மா பின்னாலேயே லொங்கு லொங்குன்னு ஓடிப்போய்க் கின்ற்றிலே எட்டிப் பார்த்தா. உள்ளேயிருந்து தண்ணி மேலே பொங்கிவருது. நிமிசத்துலே கிணறு வழியுது. பாட்டி தட்டித்தள்ளாடி வந்து, கதவைத் திறந்து விட்டுட்டாங்க. உள்ளே பாய்ஞ்சோடி வந்தவங்க வந்தால், தோட்டம், கூடம், வீடு எல்லாம் தண்ணி ஒடுது. பாட்டியம்மா கிணத்தைச் சுட்டிச் சுட்டிக் காட் றாங்க. ஆனால் அவங்களுக்கு வாயடைச்சுப் போச்சு. பாட்டியம்மாவுக்கு அப்புறமே பேச்சு ஒரு மாதிரி தட்டல்தான். அது பத்தி பேச்செடுத்தாலே அம்மாவுக்கு மருள் வந்த மாதிரி ஆயிடும். அப்புறமே அந்த அம்மா ரொம்ப நாள் இல்லே. வாய்க்காலிலே குளிக்கப் போனவங்க உச்சி வேளைக்கும் திரும்பல்லே. கரையோரமா தேடிக்கிட்டே போனவங்க ஒரு கல்லுக்கப் பால் யாருமே நடமாடாத வளைவிலே கண்டெடுத்தாங்க.